என் உடல் உறுப்புகளை தானம் செஞ்சுடுங்க..! தூக்கு கயிற்றை சுமந்தபடி நிர்பயா குற்றவாளி விடுத்த வேண்டுகோள்..! என்ன தெரியுமா?

நிர்பயா கொலை வழக்கில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட குற்றவாளிகளான முகேஷ் மற்றும் வினை ஆகிய இருவரும் தங்களுடைய கடைசி ஆசைகளை சிறை அதிகாரிகளிடம் கூறியுள்ளனர்.


கடந்த 2012 ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற சம்பவம் நாட்டையே உலுக்கியது. அதாவது ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவியான நிர்பயாவை பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமான முறையில் கொலை செய்த குற்றத்திற்காக முகேஷ்குமார் சிங், பவன் குப்தா, அக்‌ஷய் குமார், வினய் சர்மா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவர்கள் நான்கு பேரும் மீதும் பதிவு செய்யப்பட்ட வழக்கில் இவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டது.

இதனையடுத்து நீதிமன்றம் இவர்கள் நான்கு பேருக்கும் மரண தண்டனை விதிக்குமாறு தீர்ப்பளித்தது. இதன் அடிப்படையில் இவர்கள் நான்கு பேருக்கும் நேற்றைய முன்தினம் அதிகாலை 5.37 மணி அளவில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. குற்றவாளிகளின் தண்டனையை நிறைவேற்றுவதற்கு முன்பாக அவர்களிடம் கடைசி ஆசையை பற்றி கேட்கப்பட்டது.

இவர்கள் நால்வரில் முகேஷ் என்ற குற்றவாளி நான் இறந்த பின்பு என்னுடைய உடல் உறுப்புகளை தானமாக கொடுக்க விரும்புகிறேன் என்று கூறியிருக்கிறார். மேலும் மற்றொரு குற்றவாளியான வினை தான் வரைந்த ஓவியங்களை சிறை கண்காணிப்பாளருக்கு வழங்கவேண்டுமென ஆசைப்படுவதாக கூறியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் வினை வரைந்த மற்றொரு ஓவியமான அனுமன் சாலிசா என்ற ஓவியம் தனது குடும்பத்தினருக்கு வழங்க வேண்டும் என தான் ஆசைப்படுவதாக கூறியிருக்கிறார்.