நிர்பயா வழக்கு! குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேறியது!

மருத்துவ மாணவி நிர்பயா பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு திகார் சிறையில் இன்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது


கடந்த 2012 ஆம் ஆண்டு டெல்லியில் காதலனுடன் சென்று கொண்டிருந்த இளம் பெண் நிர்பயாவை பலாத்காரம் செய்து பின்னர் அவரை இரும்பு தடியால் அடித்து சித்திரவதை செய்யப்பட்டு பேருந்தில் இருந்து வீசி எறியப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை அளித்து பரபரப்பான தீர்ப்பை அளித்தது.

பின்னர் குற்றவாளிகள் தரப்பில் இருந்து குடியரசுத் தலைவர் அவர்களுக்கு கருணை மனுக்கள் அனுப்பப்பட்டன. எனினும் அந்தக் கருணை மனுக்களும் நிராகரிக்கப்பட்டன. மேலும் இவர்கள் தொடர்ந்த அத்தனை வழக்குகளையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தன.அனைத்து வாய்ப்புகளும் முடிவடைந்த நிலையில் இன்று காலை குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனையை உறுதிசெய்து நீதிமன்றம் அறிவித்திருந்தது.

இதையடுத்து இன்று அதிகாலை குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை திகார் சிறையில் நிறைவேற்றப்பட்டது. ஏழு வருடங்களுக்கு பிறகு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.