முப்பத்து ஏழே நிமிடங்கள்! பிவி சிந்துவின் திக் திக் தங்க வேட்டை தருணங்கள்! தலை நிமிர்ந்தது இந்தியா!

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் வென்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையை பி.வி.சிந்து அடைந்துள்ளார்.


ஸ்விட்சர்லாந்து நாட்டின் தலைநகர் பஸெல். இங்கு உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. பெண்கள் பிரிவில் இன்று இறுதிப்போட்டி நடைபெற்றது.

இந்தியாவின் மங்கையான பி.வி சிந்துவும், ஜப்பான் நாட்டை சேர்ந்த ஓகுஹாராவும் மோதினர். ஏற்கனவே நடைபெற்ற பல ஆட்டங்களில் சிந்து இவரை அதிகமுறை வீழ்த்தியிருந்தார். அதனால் இந்திய மக்களின் எதிர்பார்ப்பு இந்த முறை சற்று கூடுதலாகவே இருந்தது.

இந்நிலையில் போட்டியின் முதல் செட்டை சிந்து மிகவும் எளிதாக 21-7 என்ற கணக்கில் வென்றார். சிந்துவின் தடுப்பாட்டத்தை ஒகுஹாராவால் எதிர்கொள்ள இயலவில்லை. ஓகுஹாரா சரிவிலிருந்து மீண்டு வருவாரா என்று எதிர்பார்த்த போது சிந்து அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார். 

2-வது செட்டிலும் தன்னுடைய முழு பலத்தை வெளிப்படுத்திய பின்பு 21-7 என்ற செட் கணக்கில் வென்றார். இதன் மூலம் 37 நிமிடங்களில் இந்த ஆண்டுக்கான உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் சிந்து நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் இந்த தொடரில் முதல் தங்கப் பதக்கத்தை வெல்லும் இந்தியர் என்ற பெருமையை சிந்து அடைந்துள்ளார். இந்த தொடரில் இதுவரை சிந்து 5 பதக்கங்களை பெற்று உள்ளார். 2013,2014- ஆம் ஆண்டுகளில் வெண்கல பதக்கமும், 2017,2018-ஆம் ஆண்டுகளில் வெள்ளிப்பதக்கமும் என்றார்.

இந்த போட்டியில் வெற்றி பெற்ற ஒட்டுமொத்த இந்திய நாட்டையும் சிந்து மகிழ்வித்துள்ளார்.