மணக்க மணக்க புதுத் தாலி! மலர் மாலையுடன் வாக்களிக்க வந்த புதுமணத் தம்பதி..! தாலி கட்டிய கையோடு ஜனநாயக கடமை!

திருமணம் முடிந்த கையோடு இளம் ஜோடி உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க வந்த சம்பவமானது உடன்குடியில் நெகிழ்வை ஏற்படுத்தியுள்ளது.


தூத்துக்குடி மாவட்டத்தில் உடன்குடி எனும் இடம் அமைந்துள்ளது. இப்பகுதி டுபட்ட மணப்பாடு லைன் தெருவில் ஜான்சன் என்பவர் வசித்துவருகிறார். இவருடைய மகனின் பெயர் எம்பார். இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார்.

இதனிடையே இவருக்கு அதே பகுதியை சேர்ந்த குன்டல் என்னும் தெருவை சேர்ந்த விவினா என்ற பெண்ணுடன் நேற்று திருமணம் நடைபெற்றது. அப்பகுதியில் அமைந்துள்ள புனித தூய ஆவி தேவாலயத்தில் இந்த திருமணம் நடைபெற்றது. 

திருமணம் முடிந்த கையுடன் அவர்கள் உள்ளாட்சி தேர்தலில் வாக்கு செலுத்தவேண்டும் என்று முடிவெடுத்தனர். அவ்வகையில் மணப்பாடு புனித வளனார் மேல்நிலைப்பள்ளியில் மணக்கோலத்துடன் இருவரும் சென்று வாக்களித்தனர்.

திருமண கோலத்தில் வந்த தம்பதியினரை வாக்காளர் மையத்தில் கூடியிருந்தோர் வாழ்த்தி வணங்கி சென்றனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.