தந்தை வயது நபரை கணவன் ஆக்கிய உறவுகள்..! திருமணமான 3வது நாள் 20 வயது இளம் மனைவி செய்த பகீர் செயல்! அதிர்ச்சி காரணம்!

வேலூர் மாவட்டத்தில் திருமணமான மூன்றாவது நாளிலேயே மணப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


வேலூர் மாவட்டம் வடுகன்தாங்கல் என்ற பகுதியை சேர்ந்தவர் சாந்தகுமார். இவரது மனைவி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். சாந்த குமாருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். எப்போதும் குடிபோதையில் இருக்கும் சாந்தகுமார் என்பவர்க்கு அதே பகுதியில் பழக்கடை நடத்தி வரும் சங்கர் என்ற நண்பர் ஒருவர் இருந்து வந்தார். 45 வயதாகும் சங்கர் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. குடிபோதையில் சுற்றிவரும் சாந்தகுமாரின் குடும்பத்திற்கு சங்கர் தன்னால் இயன்ற உதவிகளை அவ்வப்போது செய்து வந்தார்.

இந்நிலையில் சாந்தகுமார் தனது மகள் 20 வயதான மகாலட்சுமியை தனது நண்பர் சங்கருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார். தந்தையின் இந்த முடிவிற்கு அவரது மகள் மகாலட்சுமி எதிர்ப்பு தெரிவித்தார். எல்லா எதிர்ப்புகளையும் மீறி சாந்தகுமார் தனது மகள் மகாலட்சுமியை தனது நண்பர் சங்கருக்கு கடந்த மாதம் 29ம் தேதி யாருக்கும் தெரியாமல் திகதி கோவிலில் திருமணம் செய்து வைத்துள்ளார். திருமணமான அடுத்த மூன்று நாட்களும் மணமகள் வீட்டிலேயே தம்பதியினர் இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் மே மாதம் ஒன்றாம் தேதி தனது கணவர் வெளியே சென்ற பின்பு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது அறையில் மகாலட்சுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வீட்டிற்கு வந்த கணவர் சங்கர் மனைவியின் அறையை திறந்ததும் அவர் தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.இதைப்பற்றி சம்பவம் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து மகாலட்சுமியின் உடலை கைப்பற்றி குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் தந்தை வயது உள்ள நபரை வற்புறுத்தி தனக்கு திருமணம் செய்து வைத்ததால் மகாலக்ஷ்மி மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்தார் எனவும் இதனால் தந்தை வயது நபரை திருமணம் செய்து கொண்டேமே என்ற மன விரக்தியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.