5 மாதங்களுக்கு முன்னர் திருமணமான இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமணமாகி 5 மாதத்தில் 5 மாத கர்ப்பம்! வீடியோ வெளியிட்டு இளம் கர்ப்பிணி செய்த பகீர் செயல்!
வேலூர் மாவட்டத்தில் திருப்பத்தூர் எனும் இடம் அமைந்துள்ளது. இங்கு தீபா என்ற 25 வயது இளம்பெண் வசித்து வந்துள்ளார். கடந்த சில வருடங்களாகவே இவர் ராகுல் என்ற 30 வயது இளைஞரை காதலித்து வந்துள்ளார். இவர்களுடைய காதல் விவகாரமானது வீட்டிற்கு தெரிய வந்தவுடன் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனால் பெற்றோர் எதிர்ப்பையும் மீறி இருவரும் ஐந்து மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர். தீபா திருமணமான சில நாட்களிலேயே கர்ப்பமானார். பெற்றோர் எதிர்ப்பு, பணப்புழக்கமின்மை, கணவருடன் கருத்து வேறுபாடுகள் முதலியவற்றால் தீபா மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார்.
யாரும் நேற்று வீட்டில் இல்லாததால் அவர் அதீத மன உளைச்சலுக்கு ஆளானார். தனிமையை பயன்படுத்தி கொண்ட அவர் உடல் முழுவதிலும் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளித்துள்ளார். தான் தற்கொலை செய்து கொள்வதை தீபா செல்போனில் படம் பிடித்து வைத்திருந்தார்.
தீபாவின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் துரதிஷ்டவசமாக செல்லும் வழியிலேயே தீபா உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது. சம்பவயிடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் தீபாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
எதற்காக செல்போனில் தற்கொலையை படம்பிடித்து வைத்தார், தற்கொலை செய்து கொள்வதற்கான காரணங்கள் என்ன என்பது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது வேலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.