முதல் நாள் திருமணம்..! மறுநாள் தண்டவாளத்தில் படுத்து செல்ஃபி..! இளம் ஜோடிக்கு நேர்ந்த விபரீதம்! ஆனால்..>

திருமணமாகி ஒரு நாள் முடிந்த காதல் ஜோடி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட கொடூரமானது திருப்பத்தூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பத்தூர் மாவட்டத்தில் மேம்பட்டி சாமரிஷிக்குப்பம் என்னும் இடம் அமைந்துள்ளது. இப்பகுதியில் ராமதாஸ் என்ற 29 வயது இளைஞர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில வருடங்களாக வாணியம்பாடியில் உள்ள புதூர் பூங்குளம் பகுதியை சேர்ந்த சுமித்ரா என்பவரை காதலித்து வந்தார்.

இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டாரும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இந்நிலையில் பெற்றோரின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதனிடையே பெற்றோரின் எதிர்ப்பை மீறி தங்களால் மகிழ்ச்சியாக வாழ்ந்திட இயலாது என்பதை புரிந்து கொண்ட இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர்.

நேற்று முன்தினம் நள்ளிரவில் இருவரும் ஆம்பூர் அருகேயுள்ள ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளனர். இருவரும் ரயில் தண்டவாளத்தில் படுத்தபடி செல்ஃபோனில் செல்பி எடுத்துக்கொண்டனர். அப்போது சென்னையில் இருந்து பெங்களூர் நோக்கி செல்லும் அதிவிரைவு ரயில் இருவரது மீதும் ஏறி உடலை துண்டாக்கியது.

இருவரது உடல்களும் ரத்த வெள்ளத்தில் மிதந்து கிடந்தன. மறுநாள் காலையில் சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தினர் அப்பகுதி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் தற்கொலை குறித்த தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த சம்பவமானது திருப்பத்தூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.