இம்சை அரசன் 24ம் புலிகேசி! வடிவேலுவுக்கு பதிலாக நடிக்கப்போவது இவர் தானாம்!

இம்சை அரசன் 24 ம் நான்காம் புலிகேசி படத்தில் இருந்து நடிகர் வடிவேலு நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக வேறு நடிகர் கதாநாயகனாக நடிக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது .


சிம்புதேவன் இயக்கத்தில், சங்கரின் தயாரிப்பில் ,வடிவேலு இரட்டை வேடத்தில்  கதாநாயகனாக நடித்த இம்சை அரசன் இருபத்தி மூன்றாம் புலிகேசி மாபெரும் வெற்றி பெற்றது . இந்த வெற்றியின் மூலம் நடிகர் வடிவேலு தெனாலிராமன், எலி போன்ற படங்களில் கதாநாயகனாக நடிப்பதை தொடர்ந்தார் . 

இரண்டு வருடங்களுக்கு முன்னாள் இயக்குனர் சிம்புதேவன் தயாரிப்பாளர் சங்கர் மற்றும் வடிவேலு கூட்டணியில் இம்சை அரசன் 24ஆம் புலிகேசி படத்தை தொடங்கினார். 

படப்பிடிப்பு தொடங்கிய சில காலங்களிலேயே இயக்குனர் சிம்பு தேவனுக்கும்  ,நடிகர் வடிவேலுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் படப்பிடிப்பை தொடர்ந்து நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது .மேலும் நடிகர் வடிவேலு அவர்கள் இயக்குனர்  சிம்புதேவன் மற்றும் தயாரிப்பாளர் ஷங்கருக்கு எதிராக பத்திரிகைக்கு பேட்டி அளித்தார் . இதனால் படக்குழுவினருக்கு நடிகர் வடிவேலு க்கும் இடையேயான விரிசல் அதிகமானது . இதனால் படக்குழுவினரால் நடிகர் வடிவேலுவை வைத்து இந்த படத்தை இயக்க முடியவில்லை . இதனால் நடிகர் சீமானை வைத்து இந்த படத்தை எடுக்கலாம் என்று முடிவெடுத்ததாகவும் ஆனால் இந்த முடிவும் எடுபடாமல் போனது எனவும் தகவல்கள் வெளியாகின .

இந்நிலையில் இம்சை அரசன் 24ம் புலிகேசி திரைப்படத்திற்கு புதிதாக கதாநாயகன் ஒருவர் வடிவேலுக்கு பதிலாக நடிக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன .அவர் யார் என்று விரைவில் படக்குழுவினரால் அறிவிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது .