பிகில் கதை யாருடையது? உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு! அட்லிக்கு சிக்கல்!

பிகில் திரைப்படத்திற்கு எதிராக போடப்பட்ட வழக்கில் , படத்தின் கதையை குறித்த ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.


தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் இசைப்புயல் ஏ .ஆர் .ரஹ்மான் இசையமைத்துள்ள புதிய திரைப்படம் பிகில். இந்த திரைப்படத்தில் நயன்தாரா விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் யோகி பாபு , இந்துஜா , விவேக் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

திரைப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அட்லி இயக்கியுள்ள இந்த திரைப்படத்தின் கதையை ,செல்வா என்பவர் தன்னுடைய கதை என்று கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் 256 பக்கங்கள் கொண்ட கதையை தயார் செய்து அதனை எழுத்தாளர் சங்கத்தில் தான் பதிவு செய்திருப்பதாகவும் செல்வா அந்த மனுவில் கூறியுள்ளார்.

தான் எழுதிய கதையை செல்வா இயக்குவதற்காக பல தயாரிப்பு நிறுவனங்களிடமும் கூறி இருப்பதாகவும் செல்வா கூறுகிறார். இந்நிலையில் செல்வா , தன்னுடைய கதையை இயக்குனர் அட்லி அவரது கதை என்று கூறி பிகில் திரைப்படத்தை இயக்கியுள்ளார் எனவும் , செயலில் ஈடுபட்டதால் பிகில் திரைப்படத்தை திரையிட தடை செய்யவும் நீதிமன்றத்தை நாடி உள்ளதாக கூறியிருக்கிறார்.

செல்வா பதிவு செய்த இந்த வழுக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுரேஷ்குமார், திரைப்படத்தின் கதை பற்றிய தகவல்கள் அடங்கிய ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அட்லி இடமும் தயாரிப்பு நிறுவனத்தின் இடமும் கூறியுள்ளார். மேலும் இந்த வழக்கின் விசாரணை நாளைக்கு ஒத்தி வைத்துள்ளார். பிகில் திரைப்படத்தை வெளியிடுவதற்கு எதிராக தொடரப்பட்ட இந்த வழக்கு தளபதி விஜயின் ரசிகர்களிடம் சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.