பெற்ற குழந்தைகளை மலை உச்சியில் இருந்து வீசிய சைக்கோ தந்தை..! 2 மாதங்களுக்கு பிறகு ஏற்பட்ட பகீர் திருப்பம்! அதிர்ச்சி காரணம்!

மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறில் பெற்ற குழந்தைகளை தந்தையே 250 அடி பள்ளத்தில் இருந்து கீழே தள்ளி கொலை செய்த சம்பவம் நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.


நாமக்கல் மாவட்டம் அரசம்பட்டியில் சிரஞ்சீவி-பாக்கியம் தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு கிரிதாஸ் என்ற மகனும், கவிதாரணி என்ற மகளும் இருந்தனர். சமீப காலமாக மனைவியுடன் அடிக்கடி சிரஞ்சீவி தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சிரஞ்சிவி 2 குழந்தைகளும் கடைக்கு அழைத்து செல்வதாக கூறி, நவம்பர் மாதம் செம்மேடு சீக்குபாறையில் அமைந்துள்ள ‘வியூ பாயிண்ட்’ பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.

பின்னர் குழந்தைகள் சற்றும் எதிர்பாரத விதமாக அவர்களை 250 அடி பள்ளத்தில் இருந்து கீழே தள்ளினார். இதனால் அய்யோ அம்மா என்று விழுந்த குழந்தைகள் பரிதாபகமா உயிரிழந்தனர். குழந்தைகளை காணவில்லை என பாக்கியம் போலீசார் புகார் அளித்திருந்த நிலையில் கணவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். பின்னர் குழந்தைகளை கொன்றதாக சிரஞ்சீவி அளித்த தகவலில் கிராம மக்களின் உதவியுடன் மலைப்பகுதியில் இருந்த குழந்தைகளின் சடலத்தை கைப்பற்றினர்.

பின்னர் சிரஞ்சீவியை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில், இரண்டு குழந்தைகளையும் கொலை செய்த சிரஞ்சீவியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசுவின் பரிந்துரையின் படி, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.