நீட் தேர்வு! தமிழக மாணவர்கள் அசத்தல் சாதனை!

மருத்துவப்பட்ட மேற்படிப்புக்கான நீட் தேர்வில் நாட்டிலேயே அதிகளவில் தமிழக மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் M.D., M.S., பட்ட மேற்படிப்பு மற்றும் பட்டய மேற்படிப்பில் உள்ள 26 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களுக்கு கடந்த ஜனவரி 6-ம் தேதி தேர்வு நடைபெற்றது.

நாடு முழுவதும் சென்னை, கோவை உள்ளிட்ட 148 நகரங்களில் நடைபெற்ற தேர்வை 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் எழுதினர்.

இத்தேர்வு முடிவுகள் கடந்த ஜனவரி 31-ம் தேதி வெளியிடப்பட்டது.

ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் எழுதிய தேர்வில், நாடு முழுவதும் 79,633 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.

இதில் தமிழகத்தில் இருந்து மட்டும் 11,121 பேர் தேர்வாகியுள்ளனர்.

இந்தியாவிலேயே தமிழகத்தில் இருந்து தான் 17,067 பேர் தேர்வை எழுதியிருந்தார்கள்.

கர்நாடகாவில் 9219 பேரும்,மகாராஷ்டிராவில் 7441 பேரும், ஆந்திராவில் 6323 பேரும் இத்தேர்வை எழுதியிருந்தனர்.

தேர்வு முடிவுகளின் படி,  வெற்றி பெற்றுள்ளவர்களில் 7 பேரில் ஒருவர் தமிழராக இருக்கிறார்.

மருத்துவ பட்டமேற்படிப்பிற்கு நடத்தப்பட்ட நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெற்றிருப்பது, நாடு முழுவதும் உள்ள முதன்மையான மருத்துவ கல்லூரிகளில் அவர்களின் சேர்க்கைக்கு வழிவகுக்கும்.