துப்பறிவாளன் 2..! விஷால் - மிஸ்கின் கூட்டணியில் இளையராஜா!

மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஷாலின் நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு வெளிவந்த துப்பறிவாளன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.


நடிகர் விஷால் தனது சொந்தப் பட தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி துப்பறிவாளன் திரைப்படத்தை தயாரித்தது.இந்த திரைப்படத்தின் நடிகர் பிரசன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படத்திற்கு அரோள் கரோலி இசையமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது

விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் துப்பறிவாளன் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . இந்நிலையில் துப்பரிவாளன் திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றியை அடுத்து, இயக்குனர் மிஷ்கின் துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவதாக முடிவு செய்தார்.

இந்த திரைப்படத்திற்கு விஷால் கதாநாயகனாக நடிப்பார் எனவும் , இசைஞானி இளையராஜா இசையமைப்பார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் விஷால் தற்போது சுந்தர் சி இயக்கத்தில் ஆக்ஷன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.