என் ஹஸ்பண்ட் ஓவரா செல்லம் கொஞ்சுரார்! ஒழுக்கமா இருக்குறார் - எனக்கு டைவர்ஸ் கொடுங்க! அதிர வைத்த மனைவி!

செல்லம் செல்லம் என கொஞ்சிக் கொண்டிருந்த கணவருக்கு விவாகரத்து நோட்டிஸ் அனுப்பிய ருசிகர சம்பவம் நீதிமன்றத்தையே வியப்புக்குள்ளாக்கி உள்ளது.


கணவர் சரியில்லை, சம்பாதிக்க மாட்றார், குழந்தைகளை பார்த்துக் கொள்ள மாட்றார், குடித்து விட்டு வருகிறார், வேறொரு பொண்ணுடன் தொடர்பு வைத்துள்ளார், குறட்டை விடுகிறார் என ஆயிரம் காரணங்கள் உள்ளன அவரை விவாகரத்து செய்ய.

ஆனால் புஜைரா என்ற இடத்தில் 24 மணிநேரமும் கணவர் காதலிக்கிறார், கோபமே படுவதில்லை அதனால் எனக்கு விவகாரத்து வேண்டும் என ஒரு மனைவி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதனால் கணவருக்கு மட்டுமல்ல நமக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விவகாரத்து கேட்டு அவர் அளித்த விளக்கத்தில் 24 மணிநேரமும் தன்னை மிகக் கவனமாக பார்த்துக் கொள்வதாகவும் திகட்ட திகட்ட காதலித்துக் கொண்டே இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் அந்தப் பெண். மேலும் அவர் குண்டாக இருப்பதை கிண்டல் செய்ததால் கோபப் படாமல் உடற் பயிற்சி செய்து உடல் எடையை குறைத்து விட்டதாகவும், வீட்டை சுத்தம் செய்யாமல் இருந்தாலும் கோபப்படாமல் சிரித்து விட்டு செல்வதாகவும் இதனால் எனக்கு வாழ்க்கையே போராடித்து விட்டது என தெரிவித்துள்ளார் அந்தப் பெண்.

எப்போது பார்த்தாலும் பரிசுப் பொருட்கள் வாங்கித் தருவதாக கூறிய அந்தப் பெண் ஒரு நாளாவது என் மீது கோபப்பட்டால்தான் என்னால் நிம்மதியாக வாழ முடியும் என தெரிவித்துள்ளார். நான் சொல்வதை எல்லாம் செய்யும் கணவர் எனக்குத் தேவையில்லை எனவும் நீதிமன்றத்தில் கூறியது அனைவரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆனால் கணவரோ மனைவியை மிகவும் நேசிப்பதாகவும் தயவு செய்து பிரித்துவிட வேண்டாம் எனவும் நீதிமன்றத்தில் கெஞ்சினார். இதை கேட்ட நீதிபதிகள் முதலில் கணவரும் மனைவியும் அமர்ந்து பேசுமாறும் நீங்கள் ஒன்றாக மனம் விட்டு பேசினாலே எல்லா பிரச்சனைகளும் தீர்ந்து விடும் என்றும் தெரிவித்தார்.

இந்தப் பெண் தெரிந்துதான் செய்தாரோ அல்லது எப்படியாவது விவகாரத்து பெற்றுவிட வேண்டும் என்பதற்காக ஒரு காரணத்தை தேடினாரா அல்லது உலக அளவில் பிரபலம் ஆகவேண்டும் என்பதற்காக செய்தாரா என தெரியவில்லை. 

எது எப்படியோ ஒருவேளை இந்த விவகாரத்தில் நீதிமன்றம் பெண்ணின் கோரிக்கையை ஏற்று விவகாரத்து வழங்கியிருந்தால் நம்மூரிலும் கணவன்கள் தங்கள் மனைவிகளை விழுந்து விழுந்து காதலித்து இருப்பார்கள்.

ஆனால் நம்மூர் பெண்கள் மிகவும் உஷார் கணவரை கோபப்பட வைக்க ஒரு வார்த்தை போதும். என்னங்கள் புதுசா ஒரு பட்டுப்புடவை வாங்கிக் கொடுங்க… அடுத்த நிமிடமே ஒரு சத்தம் கேட்கும் அந்த சத்தத்தின் பெயர்தான் “பளார்”