வயிறு குலுங்க சிரிக்க வைத்த முனீஸ்காந்துக்கு ஏற்பட்ட பரிதாபநிலை!

முண்டாசுப்பட்டி படத்தின் மூலம் புகழின் உச்சிக்கே சென்ற முனிஸ்காந்த் தான் வாழ்வை கடந்து வந்த பாதையை மனம் திறந்து கூறியுள்ளார்.


முண்டாசுப்பட்டி என்ற படத்தின் மூலம் அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர் நடிகர் முனீஸ் காந்த். இவரது இயற்பெயர் ராமதாஸ். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தான் இவரது சொந்த ஊர். சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு சென்னை புறப்பட்டு வந்த அவர் வடபழனியில் சுற்றி திரிவதை வாடிக்கையாக வைத்திருந்தார்.

நிம்மதியாக உறங்க கூட இடம் இல்லாமல் இரவில் ஆங்காங்கே கடை வாசல்களில் படுத்து கொண்டதாகவும் அப்போது போலீஸ் வந்து சந்தேகத்தின் பேரில் காவல் நிலையம் அழைத்துச் சென்றதாகவும் கூறியுள்ளார் ராமதாஸ். அவ்வப்போது ஜூனியர் ஆர்டிஸ்ட் டாகவும் நடித்து என்றாவது ஒருநாள் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும் என்ற லட்சியத்துடன் காத்திருந்ததாக அவர் கூறியுள்ளார்.

கோயம்பேடு சந்தையில் மூட்டை தூக்கியும் கார்களை சுத்தப்படுத்தும் பணியிலும் ஈடுபட்டு வாழ்க்கையை ஓட்டி வந்ததாக ராமதாஸ் தெரிவித்துள்ளார். பந்தி பரிமாறும் வேலையையும் மிகுந்த மகிழ்ச்சியுடன் செய்ததாக கூறியுள்ள அவர், கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் வாய்ப்புக்காக காத்திருந்து மிகவும் துன்பத்தை அனுபவித்ததாக தெரிவித்துள்ளார். முண்டாசுப்பட்டி பட வாய்ப்பு கிடைத்த பின்னர் தான் தனது வாழ்வு நல்ல நிலைக்கு திரும்பியதாக பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார் ராமதாஸ்.

வெற்றியின் போது துள்ளிக் குதிக்கவும் கூடாது தோல்வியின் போது துவண்டு போகும் கூடாது என்ற வாழ்வுக்கான தத்துவத்தையும் வருங்கால இளைஞர்களுக்கு முனீஸ்காந்த் அறிவுறுத்தியுள்ளார்.