விருதுநகர் மதிமுக நிர்வாகி கொலை! சினிமாவை மிஞ்சிய தேடுதல் வேட்டை! 7 ஆண்டுக்கு பின் மும்பையில் சிக்கிய கொலையாளி!

மதிமுக நிர்வாகி கொலை வழக்கில், கடந்த 7 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.


விருதுநகர் மதிமுக நகரச் செயலாளராக இருந்தவர் எஸ்.ஆர்.நாகராஜன். இவரது மனைவி தனபாண்டியம்மாள், விருதுநகர் முனிசிபாலிட்டி கவுன்சிலராக இருந்தவர். இவர்கள் 2 பேரும், கடந்த 2012ம் ஆண்டு இருசக்கர வாகனத்தில் கோயிலுக்குச் சென்றபோது, பின்னால் விரட்டி வந்த மர்ம கும்பல் அவர்களை கொடூரமாக வெட்டிவிட்டு, தப்பிச் சென்றது. 

இதில், தனபாண்டியம்மாள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துவிட, அவரது கணவர் நாகராஜன் மட்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, உயிருக்குப் போராடி பின்னர் உயிரிழந்தார். இந்த வழக்கில் அனைத்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியை சேர்ந்த 7 பேருக்கு தொடர்பு உள்ளதாக போலீசார் கண்டறிந்தனர்.

இந்த 7 பேரில், முக்கிய குற்றவாளியான பிரகாஷ் பாண்டியன் என்பவன், மும்பை சியோனில் தலைமறைவாக இருந்து வந்துள்ளான். அவனை, மும்பை போலீசாரின் உதவியுடன், தமிழக போலீசார் கைது செய்துள்ளனர். 7 ஆண்டுகளாக தேடப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.