தங்கையுடன் கள்ளக் காதல்! கண்டுபிடித்த மனைவி, மகளுக்கு கணவன் கொடுத்த கொடூர தண்டனை!

மும்பையில் தங்கை முறை கொண்ட பெண்ணோடு ஏற்பட்ட கள்ளக் காதலால் மனைவி, மகளை திட்டமிட்டுக் கொலை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.


மும்பை தாராவியில் உள்ள டைமண்ட் அபார்ட்மெண்ட்ஸ் என்ற அடுக்கு மாடிக் குடியிருப்பின் 10-வது மாடியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து கடந்த செவ்வாய்க் கிழமை காலை புகை வந்த நிலையில் அந்த நேரத்தில் வெளியில் சென்றிருந்த அந்த வீட்டின் உரிமையாளர் இலியாஸ் சையதுக்கு சக குடியிருப்பு வாசிகள் செல்ஃபோன் மூலம் தகவல் தெரிவித்தனர். 

 

அதையடுத்து அங்கு வந்த சையது இலியாஸ் குடியிருப்பு வாசிகளுடன் வீட்டுக்குள் சென்று பார்த்த போது அவரது 34 வயது மனைவி தெஹ்சீன் சாராவும், இரண்டரை வயது மகள் அலியாவும் கழுத்து அறுபட்டு உடல் பாதி எரிந்த நிலையில் சடலமாகக் கிடந்தனர். 

 

தகவல் அறிந்து வந்த போலீசார்  முகம் தெரியாத நபர் மீது கொலை வழக்கு பதிவு செய்தனர். எனினும் வீட்டில் இருந்து கடைசியாக புறப்பட்டுச் சென்ற நபர் என்ற வகையில் இலியாசையும் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். 

 

சம்பவம் நடைபெற்ற போது, தான் வடாலாவில் உள்ள தனது பணிமனையில் இருந்ததாக இலியாஸ் தெரிவித்தார். அதனை அவரது பணிமனை ஊழியர்களும் உறுதிப்படுத்தினர். ஆனால் சற்று நேரத்தில் அவர் புறப்பட்டுச் சென்றுவிட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

 

மேலும் அடுக்கு மாடிக் குடியிருப்பின் சி.சிடி.வி. பதிவுகளில் பர்தா அணிந்த ஒரு பெண் இலியாசின் வீட்டுக்கு வந்து சென்றது தெரியவந்தது.

சந்தர்ப்ப சூழ்நிலைகளால் இலியாசின் பக்கமே போலீசாரின் சந்தேகம் வலுத்ததையடுத்து அவரிடம் போலீசார் உரிய முறையில் விசாரணை மேற்கொண்டதையடுத்து அவர் உண்மைகளை கக்கினார்.

 

இலியாசுக்கு அவரது தங்கை முறை கொண்ட உறவுக் காரப் பெண்ணான 22 வயது அஃப்ரீன் பனோவுடன் தவறான தொடர்பு இருந்தது. ஒரு நாள் அஃப்ரீனுடன் இலியாஸ் நெருக்கமாக இருந்தை தெஹ்சீன் பார்த்துள்ளார்.

 

   இதனால் அதிர்ச்சி அடைந்த தெஹ்சீன் தங்கை முறை கொண்ட பெண்ணோடு இப்படி பழகலாமா? என்று கேட்டு சண்டையிட்டுள்ளார். அதே சமயம் இலியாஸ் தெஹ்சீனை விவாகரத்து செய்துவிட்டு அஃரீனை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்.

  

ஆனால் தெஹ்சீன் இலியாசை விவாகரத்து செய்ய தயாராக இல்லை. இதனால் இருவருக்கும் அவ்வப்போது தகராறு ஏற்பட்டது. இதையடுத்து தெஹ்சீனை கொலைசெய்யத் திட்டமிட்ட இலியாஸ் திட்டத்தை அஃப்ரீன் பனோவிடம் விவரிக்க அதனை அவர்கள் செயல்படுத்தினர்.

 

கடந்த செவ்வாய்க் கிழமை மூத்த மகளான  4 வயது பாத்திமாவை பள்ளியில் விட்டுவிட்டு தெஹ்சீன் வீடு திரும்பிய நிலையில் இலியாஸ் தெஹ்சீனை கழுத்தை அறுத்துக் கொன்றார்.

 

  அப்போது அழுத  பெற்ற குழந்தை அலியாவையும் சிறிதும் இரக்கம் இன்றி கழுத்தை அறுத்துக் கொன்ற இலியாஸ் பின்னர் அங்கிருந்து தனது பணிமனைக்குச் சென்றுவிட்டான்.

 

அதனைத் தொடர்ந்து திட்டப்படி பர்தா அணிந்தபடி இலியாசின் வீட்டுக்கு வந்த அஃப்ரீன் பனோ இருவரது உடல்களையும் தீ வைத்துக் கொளுத்திவிட்டு தெஹ்சீனின் செல்போனில் இருந்து இலியாசூக்குவிடைபெறுகிறோம், ஐ லவ் யூ என ஒரு குறுந்தகவலை அனுப்பிவிட்டு புறப்பட்டுச் சென்றார். 

 

போலீசாரின் விசாரணையில் இருவரின் கொடூரக் கொலைத் திட்டம் அம்பலமானதையடுத்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.