சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி! பிலே ஆஃப் சுற்றுக்குள் மாஸாக நுழைந்த மும்பை இந்தியன்ஸ்!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ipl போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது.


முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்களை எடுத்தது. அந்த அணியின் டி காக் சிறப்பாக விளையாடி 69 ரன்களை எடுத்தார். சன் ரைசர்ஸ் அணியின் கலீல் அஹ்மத் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

பின்னர் களமிறங்கிய சன் ரைசர்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் நிலைத்து நின்று ஆடாமல் மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்து வீச்சில் திணறினர். மனிஷ் பாண்டே மற்றும் நபி ஜோடி மட்டும் வெற்றிக்காக போராடியது.  கடைசி ஓவரில் 17 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஹார்டிக் பாண்டியா வீசிய 4வது பந்தில் நபி அவுட் ஆனார். கடைசி பந்தில் 7 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் கடைசி பந்தை மனிஷ் பாண்டே சிக்ஸர் அடித்து போட்டியை ட்ரா ஆக்கினார்.

பும்ரா வீசிய சூப்பர் ஓவரில் முதலில் பேட் செய்த சன் ரைசேர்ஸ் அணி 4 பந்துகளிலேயே 2 விக்கெட்களையும் இழந்து 8 ரன்களை மட்டுமே எடுத்தது. 

சன் ரைசர் அணியின் ரஷீத் கான் சூப்பர் ஓவர் வீச, ஹர்டிக் பாண்டியா மற்றும் பொல்லார்ட் களமிறங்கினர். ஆட்டத்தின்  3 வது பந்திலே வெற்றி இலக்கண 9 ரன்னை சேர்த்து மும்பை இந்தியன்ஸ் அணி த்ரில் வெற்றியை பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக மும்பை இந்தியன்ஸ் அணி பிலே  ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று புள்ளி பட்டியலில் 2 வது இடத்தை பெற்றது.