கெஸ்ட் ஹவுஸ்! சொகுசு ஓட்டல்! தங்கையை மாறி மாறி அனுப்பி வைத்து காசு பார்த்த அண்ணன் - அண்ணி!

மும்பையில் மாற்றாந்தாய்க்குப் பிறந்த சகோதரியை பாலியல் தொழிலில் தள்ளிய சகோதரனையும், அவனது மனைவியையும் போலீசார் தேடி வருகின்றனர்.


மும்பையின் வசாயை சேர்ந்தவர் பாதிக்கப்பட்ட சிறுமி. பாலியல் தொழில் தொடர்பாக விரார் போலீசாரிடம் பிடிபட்ட அந்தச் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்ட போது தனது மாற்றாஞ் சகோதரனும், அவனது மனைவியான தன் அண்ணியும் சேர்ந்து தன்னை பாலியல் தொழிலில் தள்ளிவிட்டதாக அந்தச் சிறுமி தெரிவித்தாள். 

அவர்கள் இருவரும் தன்னை தினமும் பல்வேறு கெஸ்ட் ஹவுஸ்களுக்கும், ஹோட்டல்களுக்கும் அனுப்பி பாலியல் தொழிலில் ஈடுபட வைத்ததாகக் கூறினாள் ஒருநாள் தங்கள் வீட்டுக்கே ஒரு நபரை வரவழைத்து தன்னை அந்த நபருடன் பாலியல் தொழிலில் ஈடுபடச் செய்ததாகவும் மனதை உறைய வைக்கும் சம்பவத்தை சொன்னவர் ..

அந்தச் சிறுமிக்கு பேச்சுத் திறன் குறைவாக இருந்ததாகவும் அந்தச் சிறுமி அரையும் குறையுமாக பேசியதை புரிந்துகொண்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். அதன் பேரில் போக்சோ, பாலியல் பலாத்காரம், ஆட்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார், தலைமறைவாகியுள்ள அந்த சிறுமியின் சகோதரன் மற்றும் அண்ணியை தேடி வருகின்றனர்.

அந்தச் சிறுமியை போலீசார் காப்பகத்துக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து சிறுமியை பயன்படுத்தியவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர். அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.