அதிவேகத்தில் கார் ஓட்டிய தாயால் 6 மாத கைக்குழந்தைக்கு ஏற்பட்ட பயங்கரம்! சாலைத் தடுப்பில் மோதி நசுங்கிய பரிதாபம்!

மும்பை: கட்டுப்பாடு இன்றி தடுப்புச்சுவர் மீது மோதிய காரில் பயணித்த 6 மாத குழந்தை உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.


மும்பையில் உள்ள அந்தேரி பகுதியை சேர்ந்தவர் பாவனா (55 வயது). இவருடைய மகள் நமிகா (30 வயது). நமிகாவுக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது. 6 மாத குழந்தையை எடுத்துக் கொண்டு, நமிகா, பாவனா மற்றும் அவர்களின் உறவினர் குருநானி (52 வயது) ஆகியோர்   காரில் வெளியிடத்திற்குச் சென்றுள்ளனர்.  காரை நமிகா ஓட்டிச் சென்றுள்ளார்.

திடீரென ஹாஜி அலி ரோடு அருகே வந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவர் மீது பயங்கர சத்தத்துடன் மோதி நொறுங்கியது. இதில், பாவனா, 6 மாத குழந்தை மற்றும் அவர்களின் உறவினர் குருநானி ஆகியோர்  படுகாயமடைந்த நிலையில், உயிரிழந்தனர். காரை ஓட்டி வந்த நமிகா மட்டும் தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிருக்குப் போராடி வருகிறார். இதுபற்றி போலீசார் வழக்குப் பதிந்து,  விசாரிக்கின்றனர்.