தோனி இனி இந்திய கிரிக்கெட் வீரர் இல்லை..! பிசிசிஐ வெளியிட்ட பட்டியலால் சர்ச்சை! பழிவாங்கினாரா கங்குலி?

பிசிசிஐ அறிவித்துள்ள கிரிக்கெட் வீரர்கள் காண்ட்ராக்டர் பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனியின் பெயர் இடம் பெறவில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்னால் பிசிசிஐ தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி பொறுப்பேற்றுக் கொண்டார்.


அவர் பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட சில மாதங்களிலேயே பல்வேறு வித்தியாசமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் பிசிசிஐ அறிவித்துள்ள கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் டோனியின் பெயர் இடம் பெறாததால் அதற்கு காரணம் பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்ற கங்குலி டோனியை பழி வாங்குவதற்காகவே இதுபோன்று செய்துள்ளார் என்று பல்வேறு சர்ச்சையான தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்ற பிறகு முதலில் தோனி செய்தது, கங்குலி மூலமாக அணியில் இடம் பிடித்திருந்த சேவாக், ஹர்பஜன், ஜாகீர் கான் போன்றோரை ஓரம்கட்டியது. இது அப்போதே விவாதமானது. இந்த நிலையில் கங்குலி பிசிசிஐ தலைவராகியுள்ள நிலையில் சம்பள பட்டியலில் இருந்து தோனி நீக்கப்பட்டுள்ளது பழிவாங்கும் நடவடிக்கையா என்று கேள்விகள் எழுந்துள்ளன.

பிசிசிஐ தற்போது 2019 ஆம் ஆண்டின் அக்டோபர் முதல் 2020 ஆம் ஆண்டில் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் கான இந்திய கிரிக்கெட் வீரர்களின் ஒப்பந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் A+ பிரிவில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி,ரோஹித் சர்மா, பும்ரா ஆகியோர் உள்ளனர். மற்ற பிரிவுகளில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்து வீச்சாளர்கள் இடம் பிடித்துள்ளனர்.

ஆனால் தோனியின் பெயர் இந்தப் பட்டியலில் எந்த பிரிவிலும் இடம்பெறவில்லை. இதனால் தோனியின் ரசிகர்கள் மிகவும் வருத்தத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.