கிருஷ்ணகிரி பிகில் கலவரம்! விஜய் ரசிகர்கள் வேடத்தில் வந்தது யார்? போலீஸ் ஐஜி வெளியிட்ட திடுக் தகவல்!

கிருஷ்ணகிரியில் நிகழ்ந்த கலவரம் படத்தின் வியாபாரத்தை உயர்த்துவதற்காக நிகழ்த்தப்பட்ட சதி என்று ஐ.ஜி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இன்று காலை பிகில் திரைப்படத்திற்கு சிறப்பு காட்சி அந்தஸ்து வழங்கப்பட்டது. இந்நிலையில் நள்ளிரவன்று கிருஷ்ணகிரி ரவுண்டானா அருகே பெரிய கலவரம் ஏற்பட்டது. சிலர் சாலையோரத்தில் நிற்க வைக்கப்பட்டிருந்த பாரிகேடுகளை அடித்து உடைத்தனர். சிலர் கற்களை வீசி ரகளையில் ஈடுபட்டுள்ளனர். சிறப்பு அந்தஸ்து காட்சியானது சற்று தாமதமாக தொடங்கியது ரசிகர்கள் இத்தகைய தேவையற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.

கலவரம் நடந்த கிருஷ்ணகிரி ரவுண்டானா பகுதியை பார்வையிட்ட ஐ.ஜி. பெரியய்யா கூறுகையில், "கிருஷ்ணகிரியில் இன்று காலை 5 மணியளவில் பிகில் திரைப்படத்துக்கான சிறப்புக்காட்சி அனுமதிக்கப்பட்டிருந்தது. இதனுடைய ரசிகர்கள் பலர் நள்ளிரவிலேயே திரையரங்கிற்கு வருகை தந்துள்ளனர். கடுமையான கலவரத்தில் கூடியிருந்த ரசிகர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அங்கிருந்த பாரிகேடுகள், சிசிடிவி கேமராக்கள், சிக்னல்கள் ஆகியவற்றை உடைத்துள்ளனர். மேலும் அமைதியான இடமாக கிருஷ்ணகிரியில் ரசிகர்கள் வேண்டும் என்று கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். இது திரைப்படத்தின் விளம்பரத்தை உயர்த்துவதற்காக நிகழ்த்தப்பட்ட செயலாகவும் இருக்கலாம். ரசிகர்கள் போர்வையில் மர்மநபர்கள் இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது" என்று கூறினார்.

இந்த சம்பவமானது கிருஷ்ணகிரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.