அன்னை தெரசா அணிந்த ஆடைக்கு பிராண்ட் அடையாளம்! ஏன் தெரியுமா?

இந்த மண்ணை விட்டு பிரியும் வரை மற்றவர்களுக்காக வாழ்ந்து வந்தவர் கருணை கடல் அன்னை தெரேசா.


அவர் எப்போதுமே வெள்ளை நிற ஆடையில் நீல நிற கோடுகள் வருமாறு உள்ள புடவையை தான் அணிந்து கொள்வார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். 

அன்னை தெரேசாவின் இந்த புடவைக்கு கடந்த 2013 ஆம் ஆண்டு அறிவுசார் உரிமம்  கோரப்பட்டது. இதன் அடிப்படையில் எவரும் இந்த புடவையை  வணிக நோக்கத்தில் வியாபாரம் செய்ய இயலாது எனவும் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. 

இருப்பினும் இந்த புடவையை எவரேனும் அணிய வேண்டுமென விரும்பினால் அவர்கள் வாடிகன் திருச்சபைக்கு கடிதம் ஒன்று எழுதவேண்டும். வாடிகன் திருச்சபை உறுப்பினர்களால் அனுமதி வழங்கப்பட்ட பின்புதான் இந்த புடவையை உடுத்திக் கொள்ள வேண்டும் என்பது சட்டம் ஆக்கப்பட்டுள்ளது.

இது முற்றிலும் வணிக நோக்கத்தை தடுப்பதற்காக எடுக்கப்பட்ட முடிவாகும் என்று வாட்டிகன் திருச்சபையின்  வழக்கறிஞர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

மிஷினரிஸ் ஆப் சேரிட்டியில் உள்ள சுமார் 3000கும் மேற்பட்ட கன்னியாஸ்திரிகள் சேவை  நோக்கத்தோடு செயல்பட்டு வருகின்றனர் . இவர்கள் அனைவரும் அன்னை தெரசா கட்டிய புடவை போன்றே உடுத்தி  இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.