ஆனால், பர்சனசலாக முதல்வருக்கு இந்த வருடம் தீபாவளி பண்டிகை கிடையாது. கடந்த அக்டோபர் 12 ஆம் தேதி முதல்வரின் தாயார் தவுசாயம்மாள் காலமானதால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த வருடம் தீபாவளி பண்டிகை கொண்டாடவில்லை.
முதல்வர் எடப்பாடியாரை நெகிழவைத்த தாயார் சிலை..! முதல்வருக்கு சிறப்பான தீபாவளி பரிசு
அதனால் வழக்கமாக முதல்வரை சந்தித்து தீபாவளி வாழ்த்து வாங்கும் நபர்களின் எண்ணிக்கையும் குறைவாகவே இருந்தது. இந்த நிலையில் முதல்வர் எடப்பாடியாரை நெகிழவைக்கும் அளவுக்கு ஒரு சம்பவம் நடந்தது.
புதுக்கோட்டை நகரமன்ற முன்னாள் தலைவர் ராஜசேகரன், புதுக்கோட்டை மாவட்ட வழக்கறிஞர் அணி துணைத் தலைவர் நெவளிநாதன் ஆகியோர் ஒரு சிலையுடன் முதல்வரை சந்திக்க வந்தனர். அந்த சிலை, முதல்வரின் தாயார் தவுசாயம்மாளின் சிலை.
அந்த சிலையைப் பார்த்ததும் எடப்பாடி பழனிசாமி ஒரு கணம் ஆனந்தத்தில் அப்படியே நின்றுவிட்டார். அந்த சிலையில், ‘அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை’ என்று எழுதப்பட்டிருந்ததைக் கண்டு கலங்கவும் செய்தார்.
சிலையை செய்தவர்களுக்குப் பாராட்டையும் அன்பையும் வழங்கியிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.