கல்யாணம் ஆகி 3 வருசம் ஆச்சு..? குழந்தை எங்க? கேட்க கூடாத கேள்வி கேட்ட மாமியார்! அவமானத்தில் மருமகள் எடுத்த விபரீத முடிவு!

திருமணமான 3 ஆண்டுகளில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது சிதம்ரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் எனும் இடம் அமைந்துள்ளது. சிதம்பரத்திற்கருகே மந்தகரை எனும் இடம் அமைந்துள்ளது. இப்பகுதியில் வினோத் என்ற இளைஞர் வசித்து வருகிறார். இவருக்கு 3 ஆண்டுகளுக்கு முன்னர் அபிராமி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் திருமணத்திற்கு பிறகு அபிராமியின் வாழ்க்கை தடம் மாறியது. அபிராமியின் மாமியார், அவரிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இதற்கிடையே அபிராமிக்கு குழந்தையும் இல்லை. இதற்கு தனது மகனை காரணமாக கூறாமல் மருமகளை காரணமாக கூறி மாமியார் கொடுமைப்படுத்தியதாக சொல்லப்படுகிறது. புகுந்த வீட்டில் நிறைய கஷ்டங்களை அபிராமி அனுபவித்து வந்துள்ளார்.

இதனால் மனமுடைந்த அபிராமி நேற்று வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். செய்தியை அறிந்தவுடன் அபிராமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் தங்களுடைய மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சிதம்பரம்-காட்டுமன்னார்கோவில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

துணை மாவட்ட ஆட்சியரான விஷ்ணு மகாஜனிடம் அபிராமியின் உறவினர்கள் புகார் மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட துணை மாவட்ட ஆட்சியர், ஆர்.டி.ஓ.வை விசாரிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இந்த செய்தியானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.