குழந்தை பிறந்த அடுத்த நொடி பிரித்துவிட்டனர்..! கொரோனாவால் காதல் மனைவியை நினைத்து ஏங்கும் கணவன்..! மனதை பிசையும் சம்பவம்!

குழந்தை பிறந்தவுடன் தாயார் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, தற்போது மீண்டுள்ள சம்பவமானது சென்னை கண்ணகி நகரில் அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை கண்ணகி நகரில் தமிழழகன் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் இயங்கிவரும் காவல் நிலையத்தின் கட்டுப்பாட்டிலுள்ள "பாய்ஸ் கிளப்பில்" பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார். இவர் பி.ஏ. பட்டதாரியாவார். இவர் அதே பகுதியை சேர்ந்த கலாவதி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சென்ற ஆண்டு கலாவதி கருவுற்றார். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக பிறந்த கலாவதி சென்ற மாதம் 27-ஆம் தேதியன்று பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் நகரிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மறுநாளே கலாவதி அழகான பெண் குழந்தையை பிரசவத்தின் மூலம் பெற்றெடுத்தார்.

இந்த மகிழ்ச்சிக்கு இடையே அதே மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த தாய் மற்றும் சேய் உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின. இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அனைவருக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது. கலாவதிக்கு வைரஸ் பரிசோதனை முடிவுகள் பாஸிட்டிவாக வந்தது. குழந்தைக்கு வைரஸ் தொற்று இல்லை என்று பரிசோதனை முடிவில் வெளியானது.

இதனால் வேறு வழியின்றி தாயையும் குழந்தையையும் மருத்துவர்கள் தனிமைப்படுத்தினர். அதே மருத்துவமனையில் இயங்கிவரும் ஒரு நாளுக்கான சிறப்பு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் கலாவதி சிகிச்சை பெற்று வந்தார். 14 நாட்கள் சிகிச்சை பெற்ற பிறகு கலாவதி நோய்த் தொற்றில் இருந்து மீண்டார். அவருடைய குடும்பத்தினருக்கு நடந்த பரிசோதனைகளிலும் யாருக்கும் வைரஸ் தொற்று இல்லை என்ற முடிவே வெளியானது.

ஆதலால் நேற்று காலை தமிழழகன் தன்னுடைய மனைவியை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வந்தார். அவர்கள் வீட்டிற்கு வரும் செய்தியைக் கேட்டு அறிந்தவுடன் அப்பகுதி காவல்துறையினர் அவர்களுக்கு பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்க முடிவு செய்தனர். அதன்படி அவர்கள் கண்ணகி நகருக்குள் நுழைந்தவுடன் காவல்துறையினர் மலர்தூவி அன்போடு அவர்களை வரவேற்றனர். கலாவதி இந்த கை குழந்தைக்கும் காவல்துறையினர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்த சம்பவமானது அப்பகுதியிலிருந்து வரை நெகிழ வைத்தது. அதன் பின்னர் தமிழழகன் மற்றும் குடும்பத்தினர் அவர்களுடைய வீட்டிற்கு சென்றுவிட்டனர்.