தகாத உறவு..! மது போதை..! தடம் மாறிய தாயால் ரத்த வாந்தி எடுத்த மகள்! அதிர வைக்கும் சம்பவம்! பதற வைக்கும் காரணம்!

தன்னுடைய கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 3 வயது குழந்தைக்கு மது கொடுத்து கொடுமைப்படுத்திய தாய் கைது செய்யப்பட்டிருப்பது ஓசூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஓசூருக்கு அருகில் பாகலூர் எனுமிடம் அமைந்துள்ளது. இங்கு நந்தினி என்பவர் வசித்து வந்தார். இவருக்கு 4 ஆண்டுகளுக்கு முன்னர் ஒருவருடன் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதியினருக்கு நயனாஸ்ரீ என்ற குழந்தையும் பிறந்தது. இதனிடையே கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக இருவரும் பிரிந்து சென்றனர்.

குழந்தை வளர்ப்பும் பொறுப்பானது நந்தினிக்கு அளிக்கப்பட்டது. தனிமையில் இருந்த நந்தினிக்கு அதே பகுதியை சேர்ந்த அசோகன் என்ற இளைஞருடன் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. நெருக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் தனிமையில் உல்லாசம் அனுபவிக்க தொடங்கினர். மேலும் மது பழக்கத்திற்கு அடிமையாக இருந்த அசோகன், நந்தினிக்கும் மதுப்பழக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.

இருவரும் நன்றாக மது அருந்திவிட்டு குழந்தையை கவனிக்காமல் இருந்து வந்துள்ளனர். சம்பவத்தன்று மது போதையில் இருந்த போது, நயனாஸ்ரீ தங்களுடைய கள்ளத்தொடர்பு இருக்கு இடையூறாக இருக்கிறார் என்று எண்ணிய நந்தினி குழந்தைகள் கட்டாயப்படுத்தி மது கொடுத்துள்ளார்.

குழந்தை நீண்ட நேரமாக அழுதுகொண்டிருந்தது கேட்டு அக்கம் பக்கத்தினர் நந்தினியின் வீட்டிற்கு விரைந்து வந்தனர். அப்போது குழந்தை மது அருந்தியதை உணர்ந்த அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக குழந்தையை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். குழந்தை தொடர்ந்து ரத்தவாந்தி எடுத்து வந்ததால் மேல் சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மேலும் குழந்தைக்கு வற்புறுத்தி மது கொடுத்த அசோகன் மற்றும் நந்தினி மீது காவல் நிலையத்தில் புகாரளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.