1 வயது குழந்தை மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த பெற்ற தாய்..! பிறகு அவர் எடுத்த பயங்கர முடிவு! நெஞ்சை உலுக்கிய சென்னை சம்பவம்!

ஒரு வயது குழந்தையுடன் தாயார் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னையில் உள்ள ஒரு பிரபல செல்போன் விற்பனையகத்தில் வேலை பார்த்து வந்தவர் சத்யநாராயணன். இவருக்கு 2 ஆண்டுகளுக்கு முன்னர் லதா என்ற 27 வயது இளம்பெண்ணுடன் திருமணமானது. இத்தம்பதியினருக்கு 1 வயதான நிக்ஷிதா என்ற குழந்தை உள்ளது.

இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்னர் லதா மீண்டும் கருவுற்றார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த சில நாட்களாக அவருக்கு கடுமையான இரத்த போக்கு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு சென்றபோது, கருக்கலைப்பதை விட வேறு வழி இல்லை என்று கூறிய மருத்துவர்கள், கருவை கலைத்துள்ளனர்.

சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய மறு நாளான நேற்று முன்தினமும் அவருக்கு தொடர்ந்து இரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அவர், வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தன்னுடைய ஒரு வயது குழந்தையுடன் இணைந்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கரும் புகையுடன் கடுமையான அலறல் சத்தம் கேட்டதை தொடர்ந்து, அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று லதாவின் வீட்டுக்கதவை உடைத்தனர். அப்போது லதா உடல் முழுவதிலும் தீக்காயங்கள் பரவி இறந்து கிடந்துள்ளார். குழந்தை நிக்ஷிதா உடலில் 80 சதவீதம் தீக்காயங்கள் ஏற்பட்டு உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் துரதிஷ்டவசமாக சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த தற்கொலை சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.