ஹாஸ்பிடலுக்கு திடீர் வருகை! ஒரு நாள் துப்புரவு பணியாளர் ஆன அமித் ஷா! ஏன் தெரியுமா?

நரேந்திர மோடியின் பிறந்தநாள் வாரத்தை சேவை வாரமாக கொண்டாடப்பட போவதாக அமித்ஷா அறிவித்துள்ளார்.


இந்திய நாட்டின் பிரதமரான நரேந்திர மோடியின் பிறந்தநாள் வருகிற 17-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அதனால் வரும் வாரத்தை "சேவை வாரமாக" கொண்டாடப்போவதாக பாஜக தலைமை அறிவித்துள்ளது.

இன்று நம் நாட்டின் உள்துறை அமைச்சரான அமித்ஷா மற்றும் பாஜக தலைவரான ஜே.பி. நட்டா டெல்லியில் அமைந்துள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்றிருந்தனர். அங்கு அவர்கள் துப்புரவு பணியில் ஈடுபட்டனர். மேலும் அங்கு சிகிச்சை பெற்று வரும் சிறார்களுக்கு இருவரும் பழங்களை கொடுத்து மகிழ்ந்தனர்.

இந்த சம்பவம் குறித்து அமித்ஷா செய்தியாளர்களிடம் கூறுகையில், "தன்னுடைய ஒட்டுமொத்த வாழ்வையும் இந்திய நாட்டிற்காகவே அர்ப்பணித்த பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாள் வாரத்தை நாம் அனைவரும் சேவை வாரமாக கொண்டாடுவோம். அதுதான் அவருக்கு நாம் செய்யும் காணிக்கையாகும்"என்று கூறியிருந்தார்.