வித்தியாசமான பாணியில் வாக்கு சேகரித்த அமைச்சர் விஜயபாஸ்கர்! வைரல் போட்டோ!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியில் செயல்பட்டுவரும் உணவகம் ஒன்றில் பரோட்டா போட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.


தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களுக்கு வருகிற டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரிப்பில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலையில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் ஆர்.கே சிவசாமி என்பவரை ஆதரித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தீவீர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். 

அவ்வாறு ஈடுபட்ட பொழுது அங்கு அருகிலிருந்த உணவகத்தில் சென்று அக்கட்சியினர் வாக்கு சேகரித்தனர். உடனே அமைச்சர் விஜயபாஸ்கர் அந்த உணவகத்தில் பரோட்டா போட்டுக்கொண்டிருந்த பரோட்டா மாஸ்டரிடம் இருந்து கரண்டியைப் பிடுங்கி பரோட்டா போட துவங்கினார். இவராக வித்தியாசமான பாணியில் ஆர்கே சிவசாமி என்பவருக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் வாக்கு சேகரித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அமைச்சர் விஜயபாஸ்கர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.