எடப்பாடி பழனிச்சாமி - ஸ்மிருதி இராணியுடன் திடீர் சந்திப்பு ! காரணம் என்ன தெரியுமா?

சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி உடன் ஆலோசனை நடத்தினார்.


இன்றைய தினம் மத்திய பெண்கள் - குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி சென்னை வந்திருந்தார். சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் நீடித்தது. இந்த சந்திப்பில் தமிழகத்தில் செயல்பாட்டில் இருந்து வரும் குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத் திட்டங்களைப் பற்றி கேட்டறிந்தார். 

மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி மத்திய அமைச்சராக பதவி ஏற்ற பின்பு முதல் முறையாக சென்னை வந்துள்ளார் . கடந்த மே மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அமேதி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிட்டு பெறும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் .

இதனையடுத்து இவருக்கு குழந்தைகள் மற்றும் பெண்கள் நல மேம்பாட்டு துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.