எகிப்து வெங்காயம் இதயத்துக்கு நல்லது.. செல்லூர் ராஜு வெளியிட்ட பகீர் தகவல்..!

எகிப்து வெங்காயம் இதயத்துக்கு நல்லது என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு கூறியிருக்கிறார்.


தொடர்ந்து விலை ஏற்றத்தை சந்தித்துவரும் வெங்காயம் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூபாய்.200 - ஐ தொட்டது. இதனால் சாதாரண மக்களால் வெங்காயத்தை வாங்க முடியாத சூழல் நிலவி வருகிறது. மற்ற மாநிலங்களில் இருந்து வெங்காயம் வரத்து குறைந்தது. இதுதான் விலை ஏற்றத்திற்கு காரணம் எனவும் கூறப்படுகிறது.  

இந்த வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்துவதற்காக எகிப்திலிருந்து வெங்காயம் திருச்சிக்கு இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்த முடியும் என்று நம்பப்படுகிறது. இதன் மூலம் வெங்காயத்தின் விலை கிலோவுக்கு 20 முதல் 30 வரை குறையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வெங்காயம் நம்மூரில் விளையும் வெங்காயத்தை போல் இல்லாமல் அளவில் மிகப் பெரியதாக காணப்படுகிறது. மேலும் இந்த வெங்காயத்தில் சல்பர் அதிகமாக இருப்பதால் காரமும் சற்று அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ எகிப்து வெங்காயம் இதயத்துக்கு நல்லது என்று செய்தியாளர்களிடம் கூறியது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமில்லாமல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி எகிப்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயத்தை ரசித்து பார்த்த பின்புதான் அது நம்முடைய சந்தைகளில் இறக்குமதி செய்யப்பட்டது எனவும் அவர் கூறினார். மேலும் பேசிய அவர் எகிப்து வெங்காயம் சாப்பிட்டால் இதய நோய் வராது அவை இதயத்திற்கு மிகவும் நல்லது எனவும் கூறினார். செல்லூர் ராஜு இவரது கூறியது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.