வகுப்பறையில் வைத்தே மாணவியிடம் காம விளையாட்டு! ராணுவப் பள்ளி ஆசிரியனுக்கு பிறகு நேர்ந்த விபரீதம்!

ராணுவப் பள்ளி ஒன்றில் 6-ஆம் வகுப்பு மாணவியிடம் அத்துமீறிய ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.


கடுமையான கட்டுப்பாடுகளுக்கும், ஒழுக்கப் பயிற்சிக்கும் பெயர் பெற்றவை ராணுவப் பள்ளிகள். அத்தகைய ஒரு ஆசிரியப் பணியில் இருக்கும் ஒரு நபரும் கேவலமான சில்லுண்டி வேலைகளில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது. 

மகாராஷ்டிர மாநிலம் நாசிக் அருகே உள்ளது போன்சாலா ராணுவப் பள்ளி. இங்கு பயிலும் ஒரு 6-ஆம் வகுப்பு மாணவி ஒருவரிடம் பள்ளி வளாகத்துக்குள்ளேயே ஆசிரியர் ஒருவர் அத்துமீறியது தெரிய வந்துள்ளது. வகுப்பறையில் பலர் முன்னிலைலேயே அந்த மாணவியிடம் காம விளையாடடு விளையாடியுள்ளான்.

இது தொடர்பான மாணவி தரப்பு புகாரின் பேரில் தொடர்புடைய ஆசிரியர் உள்ளிட்டோரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஆசிரியர் செய்த அலங்கோலங்கள் அம்பலத்துக்கு வந்தன. 

இதனைத் தொடர்ந்து ஆசிரியரைக் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே இதே ஆசிரியர் இதற்கு முன் மேலும் இரு மாணவிகளிடம் அத்துமீறியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.