கொட்டிய பனிமலை! திடீர் பிரசவ வலி! துடியாய் துடித்த கர்ப்பிணி! 4 மணி நேரம் தூக்கி சுமந்த ராணுவ வீரர்கள்! நெகிழ்ச்சி சம்பவம்!

வாகனங்கள் செல்ல இயலாத பனி உறைந்த பகுதியில் பிரசவ வலியால் அவதிப்பட்ட பெண்ணை ராணுவ வீரர்கள் 4 மணி நேரம் தூக்கி சென்று மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்த சம்பவமானது மனதை நெகிழ வைத்துள்ளது.


காஷ்மீர் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஷமீமா நிறைமாத கர்ப்பிணி ஆவார். இவர் சமீபத்தில் பிரசவ வலியால் அவதிப்பட்டு இருந்தார். பனி உறைந்த பகுதி என்பதால் அந்த இடத்திலிருந்து மருத்துவமனைக்கு செல்ல வாகனமோ, சாலையோ எதுவும் இல்லை. இதனால் என்ன செய்வதென்று அறியாமல் தவித்து இருந்த அந்தப் பெண்ணின் உறவினர்கள் வேறு வழியின்றி ராணுவத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.

இதனை அறிந்த நூற்றுக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் அந்த இடத்திற்கு விரைந்துள்ளனர். நிறைமாத கர்ப்பிணியான ஷமிமாவை ராணுவ வீரர்கள் 4 மணி நேரம் நடந்து தூக்கி சென்று மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்துள்ளனர். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த இளம்பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளது. தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ராணுவ வீரர்கள் கர்ப்பிணி பெண்ணை மருத்துவமனைக்கு தூக்கி சென்ற வீடியோ ஆனது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ராணுவ வீரர்களின் இந்த செயலை அறிந்த பிரதமர் மோடி அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். நமது நாட்டின் ராணுவ வீரர்கள் வீரத்திற்கும், தொழில் தர்மத்திற்கும் பெயர் பெற்றவர்கள். ராணுவ வீரர்களின் மனிதாபிமான இந்த செயல் மிகவும் சிறப்புக்குரியது. எந்த சூழலிலும் மக்களுக்கு உதவ வேண்டும் என்றால், எப்படியாவது செய்பவர்கள் ராணுவ வீரர்கள் என்று பிரதமர் மோடி அவர்களை பாராட்டியுள்ளார்.

மேலும் ஷமீமா மற்றும் அவரது குழந்தை நல்ல நலத்துடன் இருக்க வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன் எனவும் பிரதமர் மோடி அவர்கள் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.