அவளுக்கு இந்தப் பாட்டுனா உயிர்! மகளின் இறுதிச் சடங்கில் தந்தை பாடிய பாடல்! கண்கலங்க வைத்த சம்பவம்!

மெர்சியின் இறுதி சடங்கில் அவருக்கு பிடித்தமான பாடலை அவரது தந்தை பாடிய சம்பவமானது அனைவரையும் உருக வைத்துள்ளது.


சென்னை புறநகரான ஆவடிக்கு அருகே பட்டாபிராம் எனும் இடம் அமைந்துள்ளது. இந்த இடத்திற்கு உட்பட்ட காந்திநகர் என்னும் பகுதியை சேர்ந்தவர் மெர்சி ஸ்டெஃபி‌. இவருடைய வயது 19. சென்னையில் உள்ள அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இயங்கி வரும் பிரபல தொழில் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

இவரது வீட்டிற்கு அருகேயுள்ள நவஜீவன் நகரில் அப்பு என்ற 24 வயது இளைஞன் வசித்து வந்தார். இருவரும் நெருக்கமாக பழக தொடங்கினர். நெருக்கமானது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இவர்களுடைய காதல் விவகாரமானது இருவீட்டாருக்கும் தெரிய வந்தது. இருவீட்டாரும் இவர்களுடைய காதலுக்கு சம்மதம் தெரிவித்தனர். மேலும் ஒரு நல்ல நாளில் திருமண நிச்சயதார்த்தமும் நடைபெற்றது.

இதன்பிறகு காதல்ஜோடி பல்வேறு இடங்களுக்கு ஒன்றாக சுற்றித்திரிந்து உள்ளனர். நேற்றும் இருவரும் ஒன்றாக வெளியே போவதற்காக மெர்சி வேலைக்கு லீவு போட்டார். இருவரும் இருசக்கர வாகனத்தில் செங்குன்றம் 400 அடி சாலையில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது சாலையோரத்தில் ஒரு பம்ப்செட்டும், அதிலிருந்து தண்ணீர் கொட்டுவதும் போன்ற அழகான இடம் அமைந்திருந்தது.

அங்கு அமர்ந்து பேசி கொள்ளலாம் என்று முடிவெடுத்தனர். இடம் மிகவும் அழகாக இருந்ததால் செல்பி எடுத்துக்கொள்ளலாம் என்று நினைத்தனர். அதன்படி கிணற்றின் மேல் அமர்ந்து இருவரும் செல்பி எடுத்துக்கொள்ள முயன்றனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி மெர்சி கிணற்றுக்குள் விழுந்தார். அவரை காப்பாற்ற முயன்ற போது அப்புவும் கிணற்றுக்குள் விழுந்தார். 400 அடி ஆழமான கிணற்றுக்குள் விழுந்ததால் காப்பாற்றுமாறு இருவரும் கத்தியுள்ளனர். அப்பகுதியின் உரிமையாளரும், பொதுமக்களும் அங்கு விரைந்து வந்தனர். நேரடியாக அப்பகுதியின் உரிமையாளர் காவல்துறையினரும் தீயணைப்பு படை துறையினருக்கும் தகவல் தெரிவித்தார். 

தகவலறிந்து விரைந்து வந்த மீட்பு படை சைக்கிள் டியூப் மூலம் இருவரையும் மீட்க முயன்றனர். ஆனால் மீட்பு பணிகள் தொடர்வதற்கு முன்பே மெர்சி கிணற்றுக்குள் மூழ்கிவிட்டார். அப்போது மட்டும்தான் அவர்களால் காப்பாற்ற முடிந்தது.

அப்புவின் உடலை வெளியே எடுத்து அருகில் உள்ள மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அதே மருத்துவமனையில் மெர்சியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மெர்சியின் இறுதி சடங்கானது‌ இன்று கிறிஸ்தவ முறைப்படி நடந்தது. இந்த சடங்கில் மெர்சியின் தந்தையான தாமஸ் அவருக்கு பிடித்த பாடலை பாடியுள்ளார். சடங்கில் கலந்து கொண்ட பிறரும் பாடலை பாடி கதறி அழுதனர். இதனிடையே மெர்சி இறந்த செய்தியானது நேற்றுதான் அப்புவுக்கு கூறப்பட்டது.

தன் காதலியின் முகத்தை இறுதியாக பார்க்க இயலவில்லை என்ற துக்கத்தில் அப்பு கதறி அழுதுள்ளது அனைவருக்கும் சோகத்தை ஏற்படுத்தியது