பழைய காதலனுடன் பேசிவந்ததை பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது நாமக்கல் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருமணத்திற்கு பிறகும் காதலனுடன் தகாத உறவு! கண்டுபிடித்த சகோதரனால் இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!
நாமக்கல் மாவட்டத்தில் குமாரபாளையம் என்னும் பகுதி அமைந்துள்ளது. இதனருகே உள்ள வேதாந்தாபுரத்தை சேர்ந்தவர் கவின்குமார். இவருக்கும் சேலம் மாவட்டத்திலுள்ள மகுடஞ்சாவடி பகுதியை சேர்ந்த ஹேமலதா என்ற பெண்ணுக்கும் 6 மாதங்களுக்கு முன்னர் குடும்பத்தார் அனைவரின் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் திருமணம் ஆவதற்கு முன்னரே ஹேமலதாவிற்கு விஜய் என்பவருடன் காதல் ஏற்பட்டது. திருமணமாகி ஆறு மாதங்கள் கழித்து மீண்டும் தன் பழைய காதலனுடன் பேசத் தொடங்கியுள்ளார். இதனை அறிந்த கவின்குமார் மனைவியை கண்டிக்காது, மனைவியின் சகோதரரிடம் வருத்தப்பட்டுள்ளார்.
ஹேமலதாவின் சகோதரர் குமாரபாளையம் வந்து தன் தங்கையை கண்டித்து சென்றார். தன் லீலைகள் வெளியே தெரிந்த துக்கத்தில் இருந்த ஹேமலதா, வீட்டில் யாரும் இல்லாதபோது மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தூக்கில் தொங்குவதை கண்ட உறவினர்கள் பதறியடித்து அவரை அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால் எதிர்பாராவிதமாக வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டார் என்று மருத்துவர்கள் கூறினர். இந்த சம்பவமானது அப்பகுதி காவல்துறையினரிடம் தெரிவிக்கப்பட்டது.
சகோதரர் திட்டியதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டாரா, இல்லை வேறு ஏதும் காரணங்கள் உண்டா என்பதனை காவல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். திருமணமாகிய 6 மாதங்களிலேயே பெண் தற்கொலை செய்து கொண்டதால் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவமானது நாமக்கல் மாவட்டத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.