தலை வகிட்டில் குங்குமம்! ஆனால் நெற்றியில் பொட்டு வைப்பதில்லை! இளம் பெண்களின் விபரீத செயலால் ஏற்படும் ஆபத்து!

திருமணமான பெண்கள் நெற்றியில் குங்குமம் வைக்கும் பழக்கத்தை குறைத்து வருவதாக கணிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஒரு காலத்தில் திருமணமான பெண்கள் தங்களுடைய நெற்றியில் குங்குமம் வைத்து, தலை முழுவதிலும் பூவைத்து குடும்ப பாங்காக இருப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர். ஆனால் காலம் செல்ல செல்ல குடும்பப்பாங்கு கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கியது‌.

தலையில் பூ இல்லாமலும், நெற்றியில் குங்குமம் இல்லாமலும் பெண்கள் வாழ தொடங்கினர். இதன் தாக்கமானது வட நாட்டு கலாச்சாரத்தில் அதிகளவில் ஊன்ற தொடங்கியது. வடநாட்டு சீரியல்களில் பெண்கள் பொட்டு இல்லாமலும், பூ இல்லாமலும் இருப்பது வழக்கமானது.

இதே கலாச்சாரத்தை தற்போது தென்னிந்திய பெண்கள் சீரியல்களில் பின்பற்றி வருகின்றனர். பார்க்கும் சாதாரண பெண்களும் அதுதான் நவீன கலாச்சாரம் என்று நம்பிக்கொண்டு செயல்பட்டு வருகின்றனர். மேலும் நெற்றியில் பொட்டு வைப்பதற்கு பதிலாக வகுடில் பொட்டு வைப்பதை தொடங்கினர். இந்த கலாச்சாரமானது தமிழகத்தில் தலைவிரித்தாட தொடங்கியுள்ளது.

இது நம் தமிழ் கலாச்சாரத்தை கொஞ்சம் கொஞ்சமாக சீர்குலைக்க தொடங்கியுள்ளது. பெண்கள் தங்களுடைய கலாச்சாரத்தை மதித்து மீண்டும் பழைய முறையில் வாழ தொடங்கவேண்டும்.

இனி வரும் நிகழ்ச்சிகளிலாவது பெண்கள் நன்றாக கலாச்சாரத்தை பின்பற்றி வந்தால் வளரும்  சந்ததியினர் பார்த்து கற்றுக்கொள்வர்.