திருமணமான கையோடு கலெக்டரை சந்தித்த மணப்பெண்..! அவர் கொடுத்ததை பார்த்து நெகிழ்ந்து போன உறவுகள்! அடடே விருதுநகர்!

ஊரடங்கு காலத்தில் நடைபெற்ற திருமணத்தின் மூலம் சேமித்த செலவினை முதல்வர் நிவாரண நிதிக்கு தம்பதியினர் கொடுத்திருப்பது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


கொரோனா வைரஸ்  தாக்குதலினால் நாடு முழுவதிலும் மார்ச் மாதம் 25-ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போதிலிருந்து பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு  சின்ன சின்ன தளர்வுகளுடன் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. சுப நிகழ்ச்சிகளில் 20 பேருக்கு மேல் கலந்து கொள்ள கூடாது என்றார் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனால் ஏற்கனவே இந்த ஊரடங்கு காலத்தில் நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் எதிர்பார்த்த அளவிற்கு கூட்டம் வரவில்லை. விமர்சையாக நடத்தவேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்த பெற்றோர் பலரும் தங்களுடைய பிள்ளைகளுக்கு எளிமையான முறையிலேயே திருமணம் நடத்தி வருகின்றனர். திருமணம் எளிமையாக நடத்தப்பட்டதால் சேமிக்கப்பட்ட பணத்தை தம்பதியினர் நிவாரண நிதிக்கும், ஏழை எளியோருக்கு உதவும் வகையில் பொருட்களையும் வாங்கி தந்த வண்ணம் உள்ளனர்.

இதுபோன்று விருதுநகரில் புதிதாக திருமணம் செய்துகொண்ட சப்தமி-கபில்ராஜ் ஆதித்யா தம்பதியினர் அம்மாவட்டத்து ஆட்சியரிடம் முதல்வர் அவருடைய நிவாரண நிதிக்கு 50,000 ரூபாய் கொடுத்துள்ளனர். பின்னர் அவர்கள் கூறுகையில், "எங்களுடைய திருமணத்தை வெகு விமர்சையாக நடத்துவதற்கு இருவீட்டாரும் திட்டமிட்டிருந்தனர். ஆனால் ஊரடங்கு காலத்தில் அவர்களால் பெரியளவில் திருமணத்தை நடத்த இயலவில்லை. அப்போதுதான் ஊரடங்கு காலத்தில் திருமணம் செய்த பலர் இயலாதவர்களுக்கு தங்களால் இயன்ற உதவிகள் செய்து வந்ததை சமூகவலைத்தளத்தில் அறிந்து கொண்டோம்.

அதன்படி, குறுகிய காலத்தில் எங்களால் நிவாரண பொருட்களை வாங்க இயலவில்லை. என்ன செய்வது என்று யோசித்து கொண்டிருந்தபோது, வைரஸ் தொற்றை தடுப்பதற்கு முனைப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் மாநில அரசுக்கு நிவாரண உதவியை செய்யலாம் என்று முடிவெடுத்தோம். அதன்படி இருவரும் ஒப்புக்கொண்டு 50,000 ரூபாயை நிவாரணமாக கொடுப்பதற்காக மாவட்ட ஆட்சியரிடம் சென்றோம். அவள் எங்களுடைய முயற்சியை பாராட்டி எங்களுடைய நிவாரண தொகையை பெற்று கொண்டார்.

ஒன்றை மட்டும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் அடுத்தடுத்த நாட்களில் திருமணம் செய்துகொள்ள இருக்கும் தம்பதியினரும் எங்களை போன்ற நிவாரண உதவியை மேற்கொள்ள வேண்டும் என்பதேயாகும்" என்று கூறியுள்ளனர்.

இவர்களுடைய முயற்சிக்கு சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளதால் சுபநிகழ்ச்சிகளில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.