10 நாட்கள் கழித்து மகளுக்கு திருமணம் நடைபெற வேண்டிய சூழலில் தந்தை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
10 நாட்களில் மகளுக்கு திருமணம்! தீராத நரம்பு தளர்ச்சி! தந்தை எடுத்த விபரீத முடிவு! அதிர வைக்கும் காரணம்!
வேலூர் மாவட்டத்தில் கீழ்மத்தூர் எனும் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு சரவணன் என்ற கூலித்தொழிலாளி வசித்து வந்தார். இவருடைய வயது 50. இவருக்கு மீனா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதியினருக்கு 3 மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில் மூத்த மகளுக்கு இன்னும் 10 நாட்களில் சரவணன் திருமணத்தை நிச்சயித்திருந்தார். நரம்பு தளர்ச்சியால் சரவணன் அவதிப்பட்டு வந்ததால் அவரால் திருமண பணிகளை சரிவர மேற்கொள்ள இயலவில்லை. இதனால் அவருக்கும் அவருடைய உறவினர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில் மனமுடைந்து போன ஜவ்வாது மலையில் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தார். அதன்படி நேற்று காலை ஜவ்வாதுமலை விட்டு சென்ற சரவணன் தன் உடல் யாருக்கும் கிடைக்கக் கூடாது என்பதற்காக குழிதோண்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் இவருடைய இருசக்கர வாகனத்தை ஜவ்வாது மலையில் உள்பகுதியில் போட்டுவிட்டார். அப்பகுதியில் ஆடு மேய்ப்பவர்கள் சந்தேகமடைந்து வன அலுவலரிடம் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வன அலுவலர்கள் அப்பகுதிக்கு சென்று பரிசோதித்தனர். பரிசோதித்தது முதியவர் ஒருவரை சடலம் எரிந்த நிலையில் அவர்களுக்கு கிடைத்துள்ளது.
கடைக்கு சென்று வருவதாக கூறி வெளியேறிய சரவணன் நேரமாகியும் வீடு திரும்பவில்லை. உறவினர்களும் தங்களுடைய முயற்சி எடுத்து சரவணனின் தேடி வந்தனர்.
உடனடியாக அப்பகுதி காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்த மன அழுவதற்கும் தற்கொலை செய்துகொண்டது சரவணன் என்பதை உறுதி செய்தனர். பின்னர் அவருடைய உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த சம்பவமானது வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் நடத்தி வருகின்றனர்.