அவனா நீ! மேரேஜ் ரிசப்சனில் டாக்டர் மாப்பிள்ளைக்கு தர்ம அடி! புரட்டி எடுத்த பெண் வீட்டார்! அதிர வைக்கும் காரணம்!

அரசு மருத்துவர் என்று பொய் கூறி இளைஞர் ஒருவர் திருமணம் செய்ய முயன்ற சம்பவமானது சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


சென்னை வில்லிவாக்கத்தில் வெங்கடேசன் நகர் அமைந்துள்ளது. இங்கு கார்த்திக் என்பவர் வசித்துவருகிறார். தினமும் காலையில் ஒரு மருத்துவரை போன்று "ஜி" என்று எழுத்து பொறிக்கப்பட்ட ஸ்டேதெஸ்கோப்பையும், வெள்ளை நிற அங்கியையும் அணிந்து செல்லும் வழக்கமுடையவர். இவருடைய தோற்றத்தைப் பார்த்து இவரை அரசு மருத்துவர் என்று அப்பகுதி மக்கள் எண்ணியிருந்தனர்.

இவருடைய பழக்கவழக்கத்தை பார்த்து அதே பகுதியில் வசிக்கும் வசதியான குடும்பத்தினர் பெண் கொடுக்க முன்வந்தனர். கார்த்திக்கிடம் அந்தப் பெண்ணின் தந்தையார் விசாரித்தபோது, தனக்குப் பெற்றோர் இல்லை என்றும், உறவினர்கள் மட்டுமே உள்ளதாகவும் கூறியுள்ளார்.

கார்த்திகை நல்லவர் என்று நம்பி திருமண ஏற்பாடுகளில் பெண் வீட்டார் விரைந்து செய்தனர்.  செவ்வாய்க்கிழமை அன்று கார்த்திக்குக்கும் அந்த பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. வியாழக்கிழமை அன்று பிரம்மாண்டமான முறையில் வரவேற்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அனைத்தும் நன்றாக சென்று கொண்டு இருந்தபோது கார்த்திக்குக்கு அவருடைய மாமாவின் மூலம் கொடைச்சல் தொடங்கியது.

மது அருந்திய கார்த்திக்கின் மாமா, அவர் பித்தலாட்டமாடுவதை போதையின் உச்சியில் புலம்பியுள்ளார். கார்த்திக் ஒரு பிச்சைக்காரன் என்று பெண்ணின் தந்தையிடம் கூறியுள்ளார். இதை கேட்ட அவர் பெரிதும் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் கார்த்திக்கிடம் விசாரணை நடத்தியபோது, கார்த்திக் தன் உண்மை நிலையை விவரித்துள்ளார். உடனடியாக பெண்வீட்டார் கார்த்திக்குக்கு தர்மடி கொடுத்தனர். பின்னர் காவல்நிலையத்தில் கார்த்திகை ஒப்படைத்தனர்.  

காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது, கார்த்திக் கோயம்புத்தூரை சேர்ந்தவர் என்பதும், அவருடைய உறவினர்கள் அனைவரும் போலியானவர்கள் என்பதை கண்டுபிடித்தனர்.

8 மாதங்களுக்கு முன்னர் வில்லிவாக்கம் வந்த கார்த்திக் தன்னை பணக்காரன் போன்று வேடம் பூண்டு மணப்பெண்ணை ஏமாற்ற திட்டமிட்டு சென்னைக்கு வந்துள்ளார். இதனால் அவர் வேறு ஏதாவது பெண்ணை ஏமாற்றியுள்ளாரா என்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவமானது வில்லிவாக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.