எனக்கு கொரோனா..! போன் போட்ட இளைஞர்..! விரைந்து வந்த ஆம்புலன்ஸ்! பட்டப்பகலில் பீதி கிளப்பிய வீடியோ! எங்கு தெரியுமா?

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட இளைஞரொருவர் தாமாகவே முன்வந்து ஆம்புலன்சில் ஏறி செல்லும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கிட்டத்தட்ட 11,500-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, வடகொரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கைகளை சுத்தம் செய்யாமல் பொருட்களை தொடுவதிலிருந்து வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. 2,77,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

இந்தியாவில் குறிப்பாக கர்நாடகா, மகாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்களில் மிக அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. குறிப்பாக கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூருவில் பாதிப்பு அதிகளவில் ஏற்பட்டுள்ளது. ஐடி ஊழியர்கள் பணிபுரியும் இந்த நகரத்தில் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு வெகுவிரைவாக இந்த நோய் தொற்றுகிறது என்று கூறப்படுகிறது.

கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கிட்டத்தட்ட 11,500-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, வடகொரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கைகளை சுத்தம் செய்யாமல் பொருட்களை தொடுவதிலிருந்து வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. 2,77,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

நோய் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அப்படி இருந்தாலும் நோய் எளிதாக பரவி வருவதால் பொதுமக்கள் பொது இடங்களுக்கு செல்வதை தவிர்த்து வருகின்றனர். இதனிடையே கடைக்கு சென்று கொண்டிருந்த ஒரு இளைஞர் எனக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உணர்ந்து ஆம்புலன்ஸை வரவழைக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

அந்த இளைஞர் வெளியே பொருட்கள் வாங்குவதற்கு வந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அப்போது வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை உணர்ந்த அவர் உடனடியாக ஒரு ஆம்புலன்ஸிற்கு அழைப்பு விடுக்கிறார். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் அவரை அமரவைத்து கதவுகளை பூட்டியப்படி அங்கிருந்து உடனடியாக புறப்படுகிறது.

இந்த நிகழ்வுகளை அவருக்கு அருகில் இருந்த மற்றொருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். கடையில் பொருட்களை வாங்க வந்தவர் கூட இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது பெங்களூர் வாசிகளை பெரிதளவில் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த சம்பவமானது பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.