ஸ்டான்லி மருத்துவமனைக்குள் புகுந்து ஊழியர் ஒருவரை வாலிபர் வெட்டிய சம்பவமானது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரே நேரத்தில் 2 பேருடன் உறவு..! விதவைப் பெண்ணுக்காக ஸ்டான்லி ஹாஸ்பிடலில் வெட்டு குத்து..!

சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் ஸ்டான்லி மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு ரவி என்பவர் ஊழியராக பணியாற்றி வருகிறார். இன்று காலையில் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் பணியாற்றி கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் தீவிர சிகிச்சை பிரிவில் நுழைந்துள்ளார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது அந்த வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ரவியை வெட்டியுள்ளார். ரவி அங்கிருந்து தப்பிப்பதற்கு முயற்சி செய்துள்ளார். இருப்பினும் அந்த வாலிபர் ரவியை துரத்தி துரத்தி உடலில் பல்வேறு இடங்களில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதனால் மருத்துவமனையிலிருந்த நோயாளிகள் பேரதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக மருத்துவமனை வளாகத்தில் இருந்த காவல்துறையினர் விரைந்து வந்து கொலை முயற்சி செய்த வாலிபரை கையும் களவுமாக பிடித்தனர். காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாலிபரின் பெயர் ஐயப்பன் என்று தெரியவந்துள்ளது. மேலும் ஸ்டான்லி மருத்துவமனையில் வேலை பார்க்கும் கணவனை இழந்த ஒரு பெண்ணுக்கும் ஐயப்பனுக்கும் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. நெருக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.
இதற்கிடையே அந்த பெண் சமீபத்தில் ரவியுடன் நெருங்கி பழகி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஐயப்பன் ரவியை கொலை செய்ய முயற்சித்துள்ளார் என்று கூறப்படுகிறது. சம்பவமானது இன்று ஸ்டான்லி மருத்துவமனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.