பூனையை வறுத்து சாப்பிட முயன்ற கொடூரன்! அதிர வைக்கும் சிசிடிவி காட்சி!

மனிதர்களில் சிலர் மிகவும் வருந்தத்தக்க செயல்களை செய்வது அனைவரையும் விரக்தி அடைய செய்கின்றது.இப்படி தான் மும்பை மாநகரில் கொடிய எண்ணம் படைத்த இளைஞர், பூனைக்குட்டிகளை நெருப்பில் எரிக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மும்பை மாநகரின் புறநகராக தானே பகுதி விளங்குகிறது. அந்த பகுதியில்  மிஸ்ரா சாலை குடியிருப்பில் சிதேஷ்பட்டேல் என்ற இளைஞர் வசித்து வருகிறான். சில தினங்களுக்கு முன் பட்டேல், எரிந்து கொண்டிருந்த தீயில் 3 பூனைக்குட்டிகளை ஒவ்வொன்றாக வீசியுள்ளான். 

வெப்பம் தாங்காமல் குட்டிகள் அலறல் சத்தத்துடன் அங்கிருந்து தப்பி ஓடியது. காயங்களுடன் சுற்றி திரிந்த நிலையில், அதனை பார்த்த பக்கத்து வீட்டுக்காரர் மீட்டு சிகிச்சை அளித்துள்ளார். மேலும் குடியிருப்பு பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளை கொண்டு பட்டேல் மீது காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

அந்த சிசிடிவி கேமரா பதிவேட்டின் அடிப்படையில் வழக்கு தொடர்ந்த போலீசார், மனிதநேயமற்ற சிதேஷ் பட்டேலை கைது செய்துள்ளனர்