கணவனை பிரிந்து தனிமையில் வசித்த பெண்ணுக்கு நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கரம்! நேரில் பார்த்து அதிர்ந்த மகன்!

வீட்டில் தனியாக இருந்த பெண்ணை மர்ம நபர் ஒருவர் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவமானது நீலகிரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை மாவட்டத்தில் உதகமண்டலம் பகுதி அமைந்துள்ளது. இதனருகே நொண்டிமேடு எனும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் உமா என்ற பெண் வசித்து வருகிறார். இவருக்கு அதேப்பகுதியை சேர்ந்த பஷ்வராஜ் என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. இத்தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகனின் பெயர் உமா சங்கர்.

இவர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பணிபுரிந்து வருகிறார். இளைய மகனின் பெயர் அபிஷேக். இவர் தற்போது உமாவுடன் வசித்து வருகிறார்.நன்றாக வாழ்ந்து வந்த தம்பதியினருக்குள் திடீரென்று மனக்கசப்புகள் உருவாக தொடங்கின.

இறுதியாக 4 மாதங்கள் முன்னர் இருவரும் பிரிந்தனர். இன்று காலை, வேலை முடித்து அபிஷேக் வீடு திரும்பியபோது தாய் உமா கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அபிஷேக் தன் அண்ணனிடம் தெரிவித்தார். பின்னர் நொண்டிமேடு காவல்நிலையத்தில் தகவல் தெரிவித்தார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் உமாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், கணவர் பஷ்வராஜை விசாரிக்க முடிவெடுத்துள்ளனர். இந்த சம்பவமானது நொண்டிமேடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.