பேஸ்புக் மெசேஜில் வந்த மனைவியின் ஆபாச புகைப்படம்! பார்த்த கணவன் எடுத்த அதிரடி முடிவு!

குடும்பத்துடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தில் தன் மனைவியை மார்பிங் செய்து ஆபாசமாக புகைப்படம் எடுத்து அனுப்பிய சம்பவமானது சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னையை அடுத்து பெருங்குடி என்னும் பகுதி அமைந்துள்ளது. இங்கு கார் ஓட்டுநராக பாதிக்கப்பட்டவரின் கணவர் பணிபுரிந்து வருகிறார். இவர் சமீபத்தில் தன் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார்.

சில நாட்கள் கழித்து "அம்சத் பேகம்" என்ற ஃபேஸ்புக் அக்கவுண்ட்டில் இருந்து ஓட்டுநருக்கு மெசேஜ் வந்திருந்தது. பின்னர் இருவரும் நண்பர்களாகியுள்ளனர். இந்நிலையில் அந்த அக்கவுண்டில் இருந்து ஓட்டுநருக்கு ஒரு புகைப்படம் வந்துள்ளது.

அதில் அவருடைய மனைவியை ஆபாசமாக சித்தரித்து அனுப்பி வைத்துள்ளார். இதனை ஓட்டுநரின் மனைவிக்கும் அனுப்பியுள்ளார். தன்னிடம் இது போன்ற பல்வேறு புகைப்படம் உள்ளதாகவும் அதனை சமூக வலை தளங்களில் வெளியிடாமல் இருப்பதற்கு, தன்னுடன் உல்லாசத்தை அனுபவிக்க வேண்டும் என்று மிரட்டியுள்ளார். 

இதனைத் தொடர்ந்து ஓட்டுநரும் அவருடைய மனைவியும் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். அதாவது பாதிக்கப்பட்ட பெண் புகாரில்,  "என்னுடைய புகைப்படத்தை மார்பிங் செய்து ஆபாசமாக ஃபேஸ்புக்கில் ஃபேக் ஐடி மூலம் ஒருவர் வெளியிட்டார். மேலும் தன்னிடம் நிறைய புகைப்படங்கள் உள்ளதாக என்னை மிரட்டி வருகிறார்.

என்னை போன்று வேறு யாரும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளேன்" என்று கூறினார். இந்த சம்பவமானது சமூக வலைத்தளங்களில் பெரிதும் வைரலாகி வருகிறது.