முருகன் கோவிலில் திருநங்கைக்கு தாலி கட்டிய முஸ்லீம் இளைஞர்! ஜோடியாக கலெக்டர் ஆபிசுக்கு வந்து விடுத்த கோரிக்கை!

திருநங்கையை கல்யாணம் செய்துகொண்ட இளைஞர் பாதுகாப்பு வேண்டி கலெக்டர் அலுவலகத்தில் தஞ்சம் புகுந்திருப்பது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மதுரையில் சுண்ணாம்பு காளவாசல் என்ற இடம் அமைந்துள்ளது. இப் பகுதிக்கு உட்பட்ட செல்வ விநாயகர் கோவிலுக்கு அருகே பஷீர் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு 7 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமாகி 2 குழந்தைகளை பெற்றெடுத்தார்.சில வருடங்களுக்கு முன்னால் இவருடைய மனைவி துரதிஷ்டவசமாக இறந்து போனார்.

மதுரை மாவட்டத்திலுள்ள அகிம்சாபுரம் பகுதியை சேர்ந்தவர் பாண்டியராஜன். இவருடைய மகனின் பெயர் கல்கி. இவர் ஒரு திருநங்கையாவார். இந்நிலையில் இருவரும் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. நெருக்கமானது நாளடைவில் காதலாக மாறியது. இந்த காதல் விவகாரத்தை தெரிந்துகொண்ட பஷீர் குடும்பத்தினர் கடுமையாக எதிர்த்துள்ளனர்.

அனைவரின் எதிர்ப்பை மீறியும் இருவரும், மதுரை பூங்கா முருகன் கோவிலில் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்தவுடன் இருவரும் மதுரை கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றனர். குடும்பத்தினரின் அச்சுறுத்தலிருந்து தங்களை  பாதுகாக்குமாறு இருவரும் கலெக்டர் அலுவலகத்தில் தஞ்சம் புகுந்தனர்.

அதன் பின்னர் பஷீர் கூறுகையில், "நாங்கள் திருமணம் செய்து கொண்டது எங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு பிடிக்கவில்லை. அவர்களுடைய கடுமையான எதிர்ப்பிற்கு பின்னரும் நாங்கள் திருமணம் செய்துள்ளோம். வாழ்நாள் முடியும் வரை கல்கியுடன் இணைந்து வாழ்ந்திருப்பேன்" என்று கூறினார்.

இந்த சம்பவமானது மதுரை கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.