கர்ப்பமாக்குனது நான் தான்..! ஆனால் கல்யாணம் பண்ணமாட்டேன்..! அடம் பிடித்த இளைஞன்! இளம் பெண் செய்தது என்ன?

காதலித்து வந்த இளம் பெண்ணை கர்ப்பமாக்கி விட்டு இளைஞர் தப்பிக்க முயன்ற சம்பவமானது கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கடலூர் மாவட்டத்தில் கூடலூர் என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ப்ரியா என்பவர் வசித்து வந்துள்ளார்.  இதற்கருகேயுள்ள பெண்ணாடத்தில் உள்ள பிரபல கவரிங் நகை கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருடைய கடையின் வாசலில் ஒரு இளைஞர் பூக்கடை வைத்திருந்தார். காலப்போக்கில் அந்த இளைஞர் மீது பிரியாவுக்கு நெருக்கம் ஏற்பட்டுள்ளது. 

நெருக்கமானது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இருவரும் பல்வேறு இடங்களுக்கு ஒன்றாக சுற்றித்திரிந்து வந்துள்ளனர். ப்ரியா திடீரென்று கர்ப்பமாகியுள்ளார். இதுகுறித்து அவர் அந்த இளைஞரிடம் கூறியபோது, கர்ப்பத்தை கலைத்து விடுமாறு அந்த இளைஞர் அறிவுறுத்தியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பிரியா, கர்ப்பத்தை கலைக்க ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த இளைஞர், பிரியாவுடனான நெருக்கத்தை குறைத்து கொண்டுள்ளார். பிரியா அந்த இளைஞரின் பெற்றோரிடம் நிகழ்ந்தவற்றை கூறி முறையிட்ட போதிலும் பயனும் ஏற்படவில்லை. மேலும் அவர்கள் அந்த இளைஞருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்து வைப்பதற்கு ஏற்பாடுகளை மேற்கொண்டு வந்தனர்.

இதனை சுதாரித்துக்கொண்ட பிரியா விருதாச்சலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று நிகழ்ந்தவற்றை கூறி புகாரளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் இளைஞரின் குடும்பத்தாரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின் இறுதியில் அந்த இளைஞர் பிரியாவை திருமணம் செய்வதற்கு ஒப்பு கொண்டுள்ளார்.

உடனடியாக காவல்துறையினர் காவல் நிலையத்திலேயே திருமண ஏற்பாடுகளை மேற்கொண்டு, திருமணம் செய்து வைத்தனர். இந்த சம்பவமானது கூடலூருக்கு அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.