திருமணம் செய்வதாக கூறியே பலமுறை உல்லாசம்..! ஆனால் இப்போது? காவல் நிலையத்தில் கையை பிசைந்த இளம் பெண்!

திருமணம் செய்து கொள்வதாக கூறி காதலித்து வந்த பெண்ணை ஏமாற்றிய பட்டதாரி வாலிபரை காவல்துறையினர் கைது செய்திருப்பது அரியலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டாம் என்ற இடம் அமைந்துள்ளது. இதற்குட்பட்ட கரடிகுளம் என்ற கிராமத்தில் பாஸ்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய மகனின் பெயர் அமர்நாத். அமர்நாத்தின் வயது 22. இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்.பி‌.ஏ 2-ஆம் ஆண்டு பயின்று வந்துள்ளார்.

இதனிடையே அவர் அதே கல்லூரியில் முதுகலைப் படிப்பு படித்து வந்த 21 வயதான பெண்ணிடம் நெருக்கமாக பழகி வந்துள்ளார். இந்த நெருக்கமானது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இருவரும் பல்வேறு இடங்களுக்கு ஒன்றாக சுற்றி திரிந்துள்ளனர். அமர்நாத் திருமணம் செய்துகொள்வதாக அந்த பெண்ணிடம் நம்பிக்கையை விதைத்துள்ளார்.

அதனை நம்பிய பாதிக்கப்பட்ட இளம்பெண் அமர்நாத்துடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதனால் அந்த பெண் கர்ப்பமாகியுள்ளார். பாதிக்கப்பட்ட இளம்பெண் அப்போது தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அமர்நாத்திடம் கூறியுள்ளார். ஆனால் அவரோ அந்த இளம் பெண்ணை ஏமாற்றும் நோக்கில் அவரிடம் பேசாமல் வந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பாதிக்கப்பட்ட இளம்பெண் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அமர்நாத் மீது புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் அமர்நாத்தை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.