ஒரே நேரத்தில் இரண்டு பெண்களுக்கு தாலி கட்டி மனைவியாக்கிய இளைஞன்..! அதிர வைக்கும் காரணம்!

இந்தியாவில் இளைஞர் ஒருவர் ஒரே நேரத்தில் 2 பெண்களை திருமணம் செய்து கொண்ட சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சத்தீஷ்கர் மாநிலத்தில் ராய்ப்பூர் எனுமிடம் அமைந்துள்ளது. இங்கு கிஷோர் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நீண்டகாலமாக கவிதா பெண்ணுடன் காதல் நிலவி வந்தது. காதலிக்கும் போது கிஷோர்குமார் நிச்சயம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கவிதாவை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்துள்ளார்.

அதன் பிறகு தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கிஷோர்குமாரை வற்புறுத்தி வந்தார். கிஷோர் குமார் தனக்கு பூனம் என்ற பெண்ணுடன் திருமணம் நடக்கவிருப்பதாக சூரி கவிதாவை திருமணம் செய்துகொள்ள மறுத்துள்ளார். கிஷோர்குமார்-பூனம் திருமணத்திற்கு கவிதா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதனிடையே 10 நாட்களுக்கு முன்னர் கவிதாவுக்கு குழந்தை பிறந்துள்ளது. கிஷோர்குமார் இருவரையும் திருமணம் செய்து கொள்வதாக கவிதா மற்றும் பூனம் ஆகியோருடன் சமரசம் பேசியுள்ளார். இருவரும் ஒப்புக்கொண்ட நிலையில் திருமண ஏற்பாடுகளை கிஷோர்குமார் செய்து வந்தார்.

திருமண மேடையில் கிஷோர்குமார், கவிதா, பூனம் மாற்றம் கவிதாவின் குழந்தை மேடையை அலங்கரித்து இருந்தனர். கைக்குழந்தையின் முன்னிலையில் 2 இளம் பெண்களை ஆண் ஒருவர் திருமணம் செய்துகொண்ட சம்பவமானது சத்தீஸ்கர் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.