கொரோனாவுக்கு முன்..! கொரோனாவுக்கு பின்..! உடலை பார்த்து கதறி அழும் ஆண் நர்ஸ்..! பதற வைக்கும் புகைப்படம்!

கொரோனா சிகிச்சைக்காக வெண்டிலேட்டரில் 6 வாரங்களாக சிகிச்சை எடுத்துக்கொண்ட நபர் 24 கிலோ உடல் இளைத்துள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


அமெரிக்காவை சேர்ந்தவர் மைக் ஷட்ஸ். இவர் சென்ற மார்ச் மாதம் 16-ஆம் தேதி அன்று கொரோனா அறிகுறி உறுதியானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவருக்கு வென்டிலேட்டர் சிகிச்சை தேவைப்பட்டதால் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

42 நாட்கள் வென்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். உடல்நிலை தேறிய பிறகு மருத்துவ நிர்வாகத்தினர் அவரை மீண்டும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சிகிச்சை பெறுவதற்கு முன்னர் 86 கிலோ எடையுடன் இருந்த அவர் சிகிச்சைக்குப் பின்னர் 62 கிலோவாக எடை குறைந்துள்ளார்.

சிகிச்சைக்கு முன் மற்றும் சிகிச்சைக்குப்பின் என 2 புகைப்படங்களையும் அவர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அந்தப் புகைப்படத்திற்கு கீழ், "கண்ணாடியை பார்க்கும் போது என்னால் நிச்சயமாக அழாமல் இருக்க இயலவில்லை. இந்த நோய்த் தொற்று அனைவருக்கும் ஏற்படக்கூடிய தன்மையுடையது. சிறியவர் முதியவர் என்று அனைவருக்கும் இந்த நோய்த்தொற்று நிச்சயமாக ஏற்படும். என்னை என்னாலேயே நம்ப இயலவில்லை. 6 வாரங்களாக வெண்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வந்தேன்‌. 24 கிலோ எடை மெலிந்துள்ளேன். மீண்டும் பழைய முறையில் உடலை மெருகேற்றி வருகிறேன்" என்று கூறியுள்ளார்.

இந்த செய்தியானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.