மனைவியை தவிக்கவிட்டு திருநங்கையுடன் சல்லாபம்! கணவனின் டிக் டாக் நட்பு தகாத உறவானது!

மனைவி மற்றும் குழந்தைகளை அனாதையாக விட்டுவிட்டு காணாமல் போன இளைஞன் திருநங்கையுடன் வசித்து வரும் சம்பவமானது விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து பகுதி அருகே வழுரெட்டி என்னும் இடம் அமைந்துள்ளது. இங்கே வசித்து வந்த ஜெயப்பிரதாவுக்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த பூந்தமல்லி என்னும் கிராமத்தில் வசித்து வந்த சுரேஷ் என்பவருடன் 2013-ஆம் ஆண்டில் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

யாரும் எதிர்பாராதவாறு 2016-ஆம் ஆண்டு சுரேஷ் வீட்டை விட்டு வெளியேறினார். ஜெயப்பிரதா அவருடைய உறவினர்கள் மூலம் எவ்வளவோ தேடிப் பார்த்தும் சுரேஷ் கிடைக்கவில்லை. மனவிரக்தியில் விழுப்புரம் மாவட்டத்தின் காவல் நிலையத்தில் சுரேஷை காணவில்லை என்று ஜெயப்பிரதா புகார் அளித்தார்.

கடந்த மூன்று வருடங்களாக சுரேஷை விழுப்புரம் காவல்துறையினர் வலைவீசி தேடி வந்தனர். ஆனால் அவர்களால் சுரேஷின் இருப்பிடத்தை கண்டுபிடிக்க இயலவில்லை.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் சுரேஷ் முக ஜாடையில் ஒருவர் திருநங்கையுடன் இணைந்து எடுத்த வீடியோவை டிக்டாக்கில் பதிவேற்றம் செய்திருந்தார். இந்த வீடியோவை கண்ட ஜெயப்பிரதாவின் உறவினர், அவரிடம் காட்டியுள்ளார். ஜெயப்பிரதா சுரேஷை அடையாளம் கண்டு விழுப்புரம் காவல் நிலையத்தில் வீடியோ பதிவினை காண்பித்துள்ளார்.

விழுப்புரத்தில் உள்ள திருநங்கைகள் சங்கத்தின் மூலம் வீடியோவில் இருக்கும் திருநங்கை ஒசூரில் வசித்து வருவதாக காவல்துறையினர் கண்டறிந்தனர். பின்னர் ஓசூர் சென்ற காவல்துறையினர் சுரேஷை கண்டுபிடித்தனர். 

அவரிடம் நடத்திய விசாரணையில் ஓசூரில் டிராக்டர் கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து வந்த போது இந்த திருநங்கையுடன் பழக்கம் ஏற்பட்டது என்றும், அவரை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வருவதாகவும் கூறியுள்ளார். 

விழுப்புரம் காவல் துறையினர் சுரேஷுக்கு அறிவுரை கூறி ஜெயப்பிரதாவுடன் சேர்த்து வைத்தனர். இந்த சம்பவமானது விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.